வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 63வது படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும் லைக்கா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது.

இந்தச் செய்தி வெளியான சில நேரங்களிலேயே இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கியது. இதுகுறித்து அஜித் தரப்பிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் தான் அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது.

Also Read : விக்னேஷ் சிவன் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்ட அஜித்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் AK63

இதைத்தொடர்ந்து இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா தயாரிப்பில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஏகே 63 அறிவிப்பு வெளியான செய்தி அஜித் தரப்பிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகையால் அஜித் சுற்று வட்டாரம் இது பொய்யான தகவல் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால் அட்லீ, அஜித் இணைவது முற்றிலும் வதந்தியே என்ற செய்தி இதன் மூலம் தெரிய வருகிறது. மேலும் அட்லீ அடுத்ததாக விஜய் படத்தை இயக்க உள்ளதாக முன்பே தகவல் வெளியானது.

அதாவது விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு நிள படமாக அட்லீ எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தளபதி 67 படத்திற்கு பிறகு அட்லீ மற்றும் விஜய் கூட்டணி இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : உடல் எடை குறைக்க முடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.. பல வருடங்கள் முயன்றும் தோற்றுப்போன அஜித்

Trending News