வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷங்கரையே தூக்கி சாப்பிட்ட அட்லி.. எல்லாத்துக்கும் காரணமாய் அமைந்த உண்மை.

இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களை எடுப்பதில் கைவந்தவர். தமிழ் சினிமாவில் பல பிரமாண்டங்களை புகுத்தி பல அற்புத படங்களை தந்துள்ளார். மேலும் ஷங்கரின் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும் வசூலும் பிரமாண்டமாக தான் இருக்கும்.

அந்த வகையில் ஷங்கர், விஜய் நடித்த நண்பன் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. நண்பன் படத்தில் ஷங்கருக்கு அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர் இயக்குனர் அட்லி.

அப்போதே அட்லிக்கு விஜயுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் விஜய்க்கு ஷங்கரின் இடமில்லாத நெருக்கம் அட்லியிடம் இருந்தது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம. அட்லி தன் முதல் படமான ராஜா ராணி வெற்றிக்கு பிறகு விஜயுடன் தெறி திரைப்படத்தில் இணைந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க மெர்சல், பிகில் என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஷங்கர் பார்த்து வளர்ந்தவர் தான் விஜய். இதனால் ஷங்கர் மீது உள்ள மரியாதை காரணமாக விஜய் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவார்.

ஆனால் அட்லி ஒரு ஜாலியான கேரக்டர். விஜய் விட அட்லி வயதில் இளையவர். விஜயும் அதேபோல் அட்லி உடன் கொஞ்சம் ஜோவியளாக பழகக்கூடியவர். இதனால் இவர்கள் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அடுத்தடுத்த மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு உருவாகி இருந்தது.

மேலும் ஷங்கர் சினிமாவில் மிகவும் முதிர்ச்சியுற்றவர். இதனால் அவருக்கு சினிமாவில் ஏ டு இஸட் எல்லாமே தெரியும். இதனால் மற்றவர் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அட்லி இளம் இயக்குனர் என்பதால் விஜய் ஏதாவது மாற்றங்கள் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார். மேலும் அட்லி, விஜய் கூட்டணியில் உருவான படங்கள் எல்லாமே ஹிட் கொடுத்தது.

 

Trending News