ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முதற்கட்டமாய் 3 ஹீரோயின்களிடம் டீல் பேசிய அட்லி.. சம்பள விசியத்தில் சுற்றவிடும் சன் பிக்சர்ஸ்

Atlee: அட்லீயை பொருத்தவரை எத்தனையோ நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களின் மூலம் வெற்றியை கொடுத்து அனைவரையும் வாய் அடைத்து விடுவார்.

அதாவது ஆரம்பத்தில் எடுத்த படம் மூலம் இப்பொழுது வரை காப்பி கேட் படமாக தான் அட்லீ எடுத்து வருகிறார் என்ற ஒரு விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் சொல்றவங்க என்ன வேணாலும் சொல்லிட்டு போங்க. இதுதான் என்னுடைய ட்ரிக்ஸ் என்று வசூலை வாரி குவித்து வருகிறார்.

அந்த வகையில் ஜவான் படத்தின் மூலம் 1100 கோடி வசூலை கொடுத்து அங்கு இருக்கும் மாஸ் ஹீரோக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

எப்பொழுது அட்லீ கூட்டணியில் இணையலாம் என்று ஒரு கூட்டமே அங்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பாலிவுட்டுக்கு இப்போதைக்கு ஒரு படம் போதும் என்று சொல்லி டோலிவுட்டுக்கு திரும்பி விட்டார்.

அந்த வகையில் அல்லு அர்ஜுனா கூட்டணியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகிறது.

டென்ஷனுடன் சுற்றும் அட்லீ

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனாவுக்கு ஜோடியாக எந்த ஹீரோயினை போடலாம் என்ற பேச்சு வார்த்தைகள் அடிபட்டு வருகிறது. அதில் அட்லி மூன்று ஹீரோயின்களிடம் டீல் பேசி இருக்கிறார்.

அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தா 5 கோடியும், த்ரிஷா 10 கோடி மற்றும் ஆலியா பட் 7 கோடி வேண்டுமென்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார்கள்.

ஆனால் சன் பிக்சர்ஸ் சொன்ன விஷயம் என்னவென்றால் இவர்கள் கேட்ட சம்பளத்தை எல்லாம் கொடுக்க முடியாது. எந்த நடிகை கம்மியான சம்பளத்திற்கு ஓகே சொல்கிறார்களோ, அவர்களையே பிக்ஸ் பண்ணிருங்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் அட்லீ என்ன பண்ணுவது என்று தெரியாமல் இப்பொழுது வரை ஹீரோயினை தேர்வு செய்ய முடியாமல் சுற்றிக்கொண்டு வருகிறார்.

ஆனால் சன் பிக்சர்ஸ் பொருத்தவரை சம்பளம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. அப்படி இருக்கும் போது ஏன் ஹீரோயின்கள் சம்பளம் விஷயத்தில் மட்டும் கராராக இருக்கிறார் என்பது தான் அட்லீயை டென்ஷன் படுத்த வைக்கிறது.

Trending News