வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

1979ல் தலைக்கால் புரியாமல் ஆடிய ரஜினி கமல்.. திருந்திய உலக நாயகன் அட்ராசிட்டி செய்த தலைவர்

Rajini and kamal: ரஜினி மற்றும் கமல் என்னதான் நண்பர்கள் என்று தற்போது சொல்லினாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு இடையே போட்டி நிலவியது ஊரறிந்த விஷயம். ஆனாலும் அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்படி இவர்கள் இணைந்து நடிக்கும் பொழுது பல சில்மிஷங்களை செய்து இயக்குனரை வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.

அதாவது இவர்கள் இருவரும் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருப்பதற்கு அடித்தளமாக இருந்தவர் இவர்களுடைய குருநாதர் கே பாலச்சந்தர். இவர் இல்லை என்றால் ரஜினி கமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்து கை தூக்கி விட்டிருக்கிறார். அப்படித்தான் 1979 ஆம் ஆண்டு இவர்கள் இருவரையும் வைத்து நினைத்தாலே இனிக்கும் படத்தை எடுத்திருக்கிறார்.

அப்பொழுது படப்பிடிப்புக்காக அனைவரும் சிங்கப்பூர் போயிருக்கிறார்கள். ஆனால் போன இடத்தில் படப்பிடிப்புக்கு ரஜினி மற்றும் கமல் சரியாக வராமல் இஷ்டத்துக்கு ஊர் சுற்றி இருக்கிறார்கள். முக்கியமாக இரவு நேரத்தில் இவர்களை பார்க்க முடியாத அளவிற்கு பப் பார்ட்டிக்கு போயி அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

Also read: இந்த நாலு பேருக்கு கடைசி படமாக அமைந்த இந்தியன் 2.. ரஜினி, கமலுடன் முடிந்து போன குணசேகரனின் சகாப்தம்

அதன்பின் காலையில் வந்து தூங்கிக் கொள்வார்களாம். இதனால் படப்பிடிப்பை சரியாக செய்ய முடியாமல் கே பாலச்சந்தர் தவித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரஜினி மற்றும் கமல் இருக்கும் ரூமிற்கு சென்று மொத்த கோபத்தையும் காட்டி திட்டி இருக்கிறார். அடுத்ததாக கமல் செய்த தவறை உணர்ந்து பாலச்சந்திரிடம் மன்னிப்பு கேட்டு ஒழுங்கா படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்.

ஆனால் ரஜினி மட்டும் கொஞ்சம் கூட மாறாமல் தண்ணி அடிப்பது ஊரை சுற்றுவது என்று தொடர்ந்து திருந்தாமல் அதையே செய்திருக்கிறார். அப்பொழுது கமல் கூட அவருக்கு அட்வைஸ் பண்ணி இருக்கிறார். ஆனால் அது எதுவும் காதில் வாங்காத நிலைமைக்கு தலகால் புரியாமல் வாலிப வயதில் ரஜினி ஆட்டம் போட்டிருக்கிறார்.

பின்பு இப்படியே போனால் சரியாக இருக்காது என்று கே பாலச்சந்தர் படப்பிடிப்பை அவசர அவசரமாக முடித்துவிட்டு சென்னைக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அடுத்து கொஞ்ச நாட்கள் கழித்த பின்பு பாலச்சந்தர், ரஜினியை கூப்பிட்டு நீ சினிமா துறையில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதனால் அதில் மட்டும் உன்னுடைய கவனத்தை செலுத்தினால் உன்னுடைய கேரியரில் டாப் எடுத்துட்டு போய் விடுவாய் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Also read: கமல் இதை விடவே மாட்டாரா.? சர்ச்சையை தூண்டிவிடும் Thug Life

Trending News