இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அட்டகத்தி தினேஷ் திடீரென ஊருக்கே மகுடம் ஆகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் இன்று இவரை லைம் லைட்டுக்கு கொண்டு வந்துள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூலைவாரி குதித்து வருகிறது. முதல் வாரத்திலேயே 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதுவரை அட்டகத்தி தினேஷ் மினிமம் கேரன்டி ஹீரோவாகவே இருந்துள்ளார். இவர் நடித்த படங்கள் எல்லாமே லாபமாய் தான் அமைந்துள்ளது.
லப்பர் பந்து தினேஷ் செய்த 5 சம்பவங்கள்
அட்டகத்தி: பா ரஞ்சித் இயக்கிய முதல் படம் இதுதான். தினேஷ் நடிப்பில் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக அமைந்த படம். இந்த படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே அருமையாக அமைந்திருந்தது. இந்த படம் மூலம் தான் அவருக்கு அட்டகத்தி தினேஷ் என்ற பெயர் வந்தது. இந்த படத்தின் மூலம் மிக கம்மி பட்ஜெட்டில் பெரிய லாபம் அடைந்தார் தயாரிப்பாளர்.
குக்கூ: 2014ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், பார்வையில்லாதவர்களுக்கிடையே தோன்றும் காதலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இந்தப் படம் ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்து நல்ல லாபத்தை பெற்று கொடுத்தது.
விசாரணை: 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் தமிழ் சினிமாவிற்கு சவால் விட்ட புதுக்கதை. வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி நடிப்பில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து லாபம் பெற்று தந்தது.
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு: இப்படி ஒரு படம் வந்தது யாருக்கும் தெரியாது. தினேஷ், கயல் ஆனந்தி போன்றவர்கள் நடித்திருப்பார்கள். மெதுவாக சொல்லக்கூடிய திரைக்கதை இருந்தாலும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து லாபம் வந்தது.
ஜெ பேபி: தாய் பாசத்தை மிஞ்சியது வேறு ஏதும் இல்லை என மீண்டும் ஒரு முறை நிரூபித்த படம்தான் ஜெ பேபி. நடிப்பு ராட்சசி ஊர்வசி இந்த படத்தில் மிரட்டி இருந்தார். தினேஷ், லொள்ளு சபா மாறன் நடித்த இந்த படம் வசூல் ரீதியாக லாபம் பெற்றுக் கொடுத்தது