வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஓவர் கவர்ச்சியால் விஜய் சம்பாதித்த அவப்பெயர்.. மக்கள் வெறுத்து ஒதுக்கிய எஸ்ஏ சந்திரசேகரின் 5 படங்கள்

விஜயின் தந்தை, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய ஆரம்ப கால படங்களில் எல்லாம் கதாநாயகிகளுடன் கவர்ச்சி தூக்கலாக எடுத்ததனால் அந்தப் படங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு பெரிய தோல்வியை சந்தித்தது.

நாளைய தீர்ப்பு: குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த விஜய், முதல் முதலாக அம்மா ஷோபா திரைக்கதை எழுத, அப்பா சந்திரசேகரனின் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அப்பாவை மட்டுமே நம்பி இறங்கும் விஜய்யின் ஆரம்பமே சரி இல்லையப்பா என பலரும் விமர்சித்தனர்.

அந்த அளவிற்கு விஜயை ஹீரோ மெட்டீரியல் ஆக பார்க்காமல் ஏனோ தானோன்னு கவர்ச்சி மட்டும் காட்டி 1992-ம் ஆண்டு இந்தப் படத்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி தயாரித்து இருப்பார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘இந்த முக அமைப்பிற்கு ஹீரோ கேக்குதா?’ என்று, தற்போது பாக்ஸ் ஆபீஸில் சக்கரவர்த்தியாக வலம்வரும் விஜயை திட்டி தீர்த்தனர் அன்று.

செந்தூரப்பாண்டி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி 1993 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் அறிமுக கதாநாயகி யுவராணி உடனான காட்சிகள் அனைத்தும் கண் கூசும் வகையிலேயே எடுக்கப்பட்டிருக்கும்.

இதில் விஜய், சில்மிஷம் என்கின்ற பெயரில் எல்லை மீறி நடித்திருப்பார். படத்தின் முதல் பாகம் முழுவதும் யுவராணியின் கவர்ச்சிதான் ஹைலைட்டாக கண்டிருப்பார்கள். இந்தப்படத்தில் விஜயகாந்த், கௌதமி இருவரும் கௌரவ வேடத்தில் நடித்தனர்.

ரசிகன்: 1994 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று, இளையதளபதி என்கின்ற அடைமொழியை விஜய்க்கு பெற்றுத்தந்தது. ஆனால் இந்தப் படம்தான் விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே மிகவும் ஆபாசமான படம் என குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருப்பார்.

இதில் இயக்குனர் கதையையோ அல்லது ஹீரோவையும் நம்பாமல் கதாநாயகியான சங்கவியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி எடுத்திருப்பார். இந்த படத்தில் இடம்பெறும் பாத்ரூம் காட்சி படு கேவலமாக சித்தரித்திருப்பார்கள்.

அதிலும் வக்கிரத்தின் உச்சத்துக்கே போய் மாமியாராக வரும் ஸ்ரீவித்யாக்கு சோப்பு போடுவது போன்றும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்தால் தந்தை தனது மகனை வைத்து எடுக்க கூடிய காட்சிகளா இதெல்லாம்! என ரசிகர்கள் முகம் சுளித்தனர்.

விஷ்ணு: தந்தை இயக்கத்தில் தனக்குத்தானே விஜய் சூனியம் வைத்துக் கொண்ட மற்றொரு படம் விஷ்ணு. 1995-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கதை என்று பெரிதாக இல்லை. இந்த படத்தில் மீண்டும் சங்கவியுடன் இணைந்து விஜய் கவர்ச்சியாக நடித்திருப்பார்.

குறிப்பாக இந்தப் படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்திலும் கவர்ச்சி நிரம்பி வழிந்தது. அதிலும் ஆற்றங்கரையில் சங்கவி விஜய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி, பல இளம் ரசிகர்களை சபலப்படுத்தியது. இந்த படத்திற்கு பிறகு விஜய்-சங்கவி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

மாண்புமிகு மாணவன்: கல்லூரி மாணவராக விஜய், இந்தப்படத்தில் விஜய்யை விடாமல் துரத்தும் கதாநாயகியுடன் கவர்ச்சியாக பேசுவது, திருமணத்திற்கு முன்பு மனைவியாக வாழவேண்டும் என சொல்வதெல்லாம் படத்தை பார்ப்போரை முகம் சுளிக்க செய்தது. இப்படத்திலும் கதாநாயகி கவர்ச்சி உடையில் வலம்வருவதை படத்திற்கு கூடுதல் பலமாக இயக்குனர் பார்த்திருக்கிறார்.

இப்படி தந்தை இயக்கத்தில் விஜய் நடித்த இந்த ஐந்து படங்களும் அவருக்கு வெற்றியை பெற்று தந்ததை விட ஓவர் கிளாமரான நடிகர் என்ற அவபெயரை சம்பாதித்து, மக்களின் மனதில் வெறுப்பை விதைத்துதான் மிச்சம்.

Trending News