சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

அரசியல் மாநாட்டையே மிஞ்சிய ஆடியோ லான்ச்.. அரங்கத்தையே அலறவிட்ட விஜய்

நேற்று காலை முதலே சோசியல் மீடியாவில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து இன்று அந்த நிகழ்ச்சியில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் தான் ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது. அதிலும் ரசிகர்கள் செய்த ஆரவாரம் பல விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.

அந்த வகையில் நேற்று நடந்த ஆடியோ லான்ச் அரசியல் மாநாட்டையே மிஞ்சும் வகையில் மாஸ் காட்டி இருக்கிறது. பொதுவாக அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடுகளில் தான் இப்படி ஒரு வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும். ஆனால் அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் மெர்சலாக களை கட்டியது வாரிசு ஆடியோ லான்ச்.

Also read: முழு எனர்ஜியுடன் வந்த விஜய்.. இனிமே இப்படித்தானாம், புது ஸ்டைலில் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

விஜய்யை பார்ப்பதற்காகவும் அவருடைய பேச்சை ரசிப்பதற்காகவும் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டம் தலைவா தலைவா என்று கோஷம் போட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள். அது மட்டுமல்லாமல் போனில் டார்ச் லைட் ஆன் செய்த அந்தத் தருணம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி ஒரு வரவேற்பு இருக்கும் என்று திரையுலகம் எதிர்பார்த்தாலும் இப்படிப்பட்ட பல நிகழ்வுகள் பலரையும் ஆச்சரியப்பட தான் வைத்துள்ளது.

அதிலும் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி வீடியோ எடுத்து அதை மேடையிலேயே ஒருவரிடம் கொடுத்து நெஞ்சுக்குள் குடியிருக்கும் என்ற ஹேஷ் டாக்குகளில் போட வேண்டும் எனக் கூறியது அசத்தல் தருணம். இதை நிச்சயம் ரசிகர்கள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அந்த விதத்தில் விஜய் சோசியல் மீடியாவை மிரள விட்டிருக்கிறார்.

Also read: 15 வருடங்களில் 5 படங்களை மட்டுமே இயக்கிய வம்சி.. காரணத்தை கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

மேலும் வழக்கம் போல விஜய் குட்டி கதை, சுவாரஸ்ய பேச்சு, ரசிகர்களிடம் காட்டிய அன்பு என இந்த ஆடியோ லான்ச் சிறப்பாகவே நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி இப்போது மற்றொரு முக்கிய விஷயத்துக்கும் அடிபோடும் படியாக அமைந்துள்ளது. அதாவது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணமாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

விஜய்யும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் நேற்று நடந்த நிகழ்வை பார்க்கும் போது இது ஒரு அரசியல் வருகைக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்களின் சப்போர்ட் இருக்கிறது. இதனால் விரைவில் அவருடைய அரசியல் என்ட்ரி இருக்கும் எனது எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் நேற்று ஒரு நாளிலேயே தமிழ்நாட்டையே அலற விட்டிருக்கிறார்.

Also read: வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

Trending News