புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆகஸ்ட் 15ஐ குறிவைக்கும் 5 படங்கள்.. தங்கலானுக்கு டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

August 15 Release Movies: பொதுவாக பண்டிகை நாட்களில் படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐந்து படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகிறது.

தங்கலான்

பா ரஞ்சித்தின் அற்புதமான இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. விக்ரமின் கேரியரில் மிகப் பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

ரகு தாத்தா

தங்கலான் விக்ரமுக்கு போட்டியாக அதே நாளில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகிறது. எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் சுமன் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் காமெடி ஜானரில் உருவாகி உள்ளதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்.

டிமான்டே காலனி 2

அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்ட் காலனி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படமும் ஆகஸ்ட் 15 வெளியாகிறது.

திருபச்சன்

அஜய் தேவகன் நடிப்பில் வெளியான மிஸ்டர் ரெய்டு படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது திரு பச்சன். இப்படத்தில் ரவி தேஜா மற்றும் பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள நிலையில் ஹரிஷ் சங்கர் இயக்கி இருக்கிறார்.

டபுள் இஸ்மார்ட்

ராம் பொதினேனி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது டபுள் இஸ்மார்ட். மேலும் இஸ்மார்ட் ஷங்கர் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 வெளியாகும் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சம்பவத்திற்கு தயாராகும் தங்கலான்

Trending News