Google Introduce 3 Smartphones: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துவது மொபைல் போன் தான். எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா போன் இல்லை என்றால் கையும் ஓடாது காலும் ஓடாது என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் போனுக்கு அடிமையாகி விட்டோம். ஒரு காலத்தில் தூரத்தில் இருப்பவர்களிடம் பேசுவதற்கும் ஒரு தகவலை சொல்வதற்கு மட்டும் போன் பயன்படுத்தி வந்தோம்.
ஆனால் போகப் போக அதனுடைய சிறப்பு அம்சங்கள் அதிகரித்துக் கொண்டே போய்விட்டது. அதனால் தற்போது விலை உயர்ந்த ஃபோன்களை வாங்கி அதில் இருக்கும் பயன்பாட்டுகளை பயன்படுத்த ஆசைப்படுகிறோம். அப்படித்தான் ஸ்மார்ட் போனுக்கு அனைவரும் அடிமையாகி விட்டோம். இதில் எத்தனையோ சிறப்பு அம்சங்கள் கொண்ட போன்கள் இருந்தாலும் புதுசாக அறிமுகமாகி வரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன் மீது மோகம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
சிறப்பு அம்சங்கள் கொண்ட கூகுள் ஸ்மார்ட் போன்கள்
அந்த வகையில் மேட் பை கூகுள் 2024 நிகழ்வில் (Made By Google Event 2024) பிக்சல் 9 சீரிஸின் கீழ் மொத்தம் 4 ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL), பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold). இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த 4 புதிய ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் Actua OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் Octa PD வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும். இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
இதுபோக ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளும் உள்ளன.
மேலும் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Peony, Porcelain, Obsidian மற்றும் Wintergreen கலர்களில் வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனில் 128ஜிபி வேரியண்ட் இருந்தாலும், இந்தியாவில் விற்கப்படாது.
அடுத்ததாக உள்ள பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ப்ரோ மாடல்களுமே Hazel, Porcelain, Rose Quartz மற்றும் Obsidian ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.
இந்த மூன்று ஸ்மார்ட் போன்களும் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு தயாராக இருக்கிறது. அத்துடன் flipkart, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழியாக மக்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த ஸ்மார்ட் போனின் விலையை பார்த்தால் தான் வாங்க முடியாத அளவிற்கு தலைய சுத்த வைக்குது.