புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அப்பாவை மிஞ்சிய உயரம், அமுல் பேபி போல் இருக்கும் அவந்திகா புகைப்படம்.. குஷ்பூவை ஓவர் டேக் செய்யும் அழகு

Actress Kushbhoo: குஷ்பூ, சுந்தர் சி இருவரும் தற்போது நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், அரசியல் என தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். அதேசமயம் பல வருட திருமண வாழ்க்கையில் காதல் குறையாத தம்பதிகளாகவும் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகளான அவந்திகா எப்பொழுதுமே சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கக்கூடியவர். வெளிநாட்டில் இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். அதில் லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also read: ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

அப்பாவை விட அதிக உயரத்துடன் அம்மாவை மிஞ்சும் அழகில் இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் எப்போது சினிமாவில் நடிக்க போகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதிலும் சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு இருக்கும் இவருடைய கலர் பக்கா ஹீரோயின் மெட்டீரியலாக இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அப்பாவை மிஞ்சிய உயரம்

avanthika-sundar
avanthika-sundar

ஏற்கனவே இவருடைய அழகை பார்த்த பலரும் விரைவில் இவர் சினிமாவுக்கு வருவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் குஷ்பூ அதற்கான முயற்சியில் தான் தற்போது இருக்கிறாராம். அவந்திகாவுக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதால் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் இவர் அறிமுகமாகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: 3 பெயர் மாற்றியும் காணாமல் போன கொழுக் மொழுக் நாயகி.. கிளாமரை நம்பி களமிறங்கிய குஷ்பூ ஜெராக்ஸ்

அந்த வகையில் அவந்திகா தற்போது ஹேர் கலரிங் செய்து மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அழகாக புடவை, நகை என அணிந்து ஹோம்லியாக இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோக்கள் தான் இப்போது ரசிகர்களை திணறடித்து வருகிறது. மேலும் உங்களின் கோலிவுட் என்ட்ரிக்காக நாங்கள் தவம் இருக்கிறோம் என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். அந்த வகையில் அவந்திகா திரையுலகுக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அமுல்பேபி போல் இருக்கும் அவந்திகா

avantika-kushpoo-daughter
avantika-kushpoo-daughter

Trending News