புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியளவில் ஏமாற்றத்தை தந்த அவதார் 2 வசூல்.. தமிழ்நாட்டில் இத்தனை கோடி தானா?

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை அவதார் படத்தின் வசூலை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத நிலையில் அவதார் 2 படம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

தி வே ஆஃப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 400 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐமேக்ஸ் பார்மெட்டில் இதை பார்க்க மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Also Read : உலக அளவில் எதிர்பார்த்த அவதார் 2.. வாட்டர் அமுஸ்மெண்ட் பார்க் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

அதாவது கிட்டத்தட்ட 4 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட் வரை விற்று உள்ளனர். இப்போது எல்லா திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவதார் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாகத்தை விட இது சற்று மந்தமாக இருப்பதாக கூறினார்கள்.

இந்நிலையில் அவதார் 2 படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 10 கோடி வசூல் எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இது தவிர ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 10 கோடி வசூல் ஆகியுள்ளது .

Also Read : பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் அவதார் 2.. பிரமிக்க வைத்த முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

கர்நாடகாவில் 4 கோடி வசூல் செய்துள்ளதாம். அவதார் முதல் பாகம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 45 கோடி வசூல் செய்த நிலையில் இப்போது 20 கோடி வசூல் செய்ய திணறி வருகிறதாம். இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே அவதார் திரைப்படம் வெளியாகி உள்ளது.

அதாவது அவதார் 2 படத்தை திரையிட அதிக ஷேர் கேட்டதால் சில திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். ஆகையால் சில தியேட்டர்களில் மட்டும் அவதார் 2 படம் வெளியாகி வசூலை பெற்றுள்ளது. மேலும் முதல் நாள் வசூலில் இந்திய அளவில் 45 கோடியும் உலகளவில் 90 மில்லியன் டாலரையும் அவதார் 2 படம் வசூல் செய்துள்ளது.

Also Read : 13 வருடமாக காக்க வைத்து புதிய உலகிற்கு கூட்டிச் சென்ற அவதார் 2.. எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Trending News