சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா மூலம் பிரபலமானவர்தான் ஆயிஷா. அதன் மூலம் ரவுடி பேபி என்று அழைக்கப்படும் இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில் சில பல சர்ச்சைகளை சந்தித்த அவர் சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து பிரபல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்த ஆயிஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்திலும் ஆக்டிவாக இருந்தார். இந்நிலையில் அவர் தன் காதலரை அறிமுகப்படுத்தி இருப்பது சில பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஏனென்றால் இவர் ஏற்கனவே சத்யா தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்தார்.
Also read: ஆயிஷாவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற அசீம்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த விபரீதம்
அது மட்டுமல்லாமல் ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் அதை தொடர்ந்து அவருக்கு பல காதல்கள் இருக்கிறது என்றும் வெளியான செய்திகள் அதிர்ச்சியை கிளப்பியது. இதை ஆயிஷாவின் முன்னாள் காதலரே மீடியாக்கள் முன் அம்பலப்படுத்தி இருந்தார். அது மட்டுமல்லாமல் ஆயிஷா அவ்வப்போது தன் காதலர்களை மாற்றி விடுவார் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
புது காதலனுடன் கமிட்டான ஆயிஷா

மேலும் நடிகர் விஷ்ணுவும் ஆயிஷாவும் காதலித்தது உண்மைதான் என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் தனிமையில் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆயிஷா இது குறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தான் அவர் தன் காதலர் யார் என்ற விஷயத்தை போட்டு உடைத்திருக்கிறார்.
Also read: செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷா.. கேவலத்தின் உச்சத்திற்கு சென்ற பிக்பாஸ் வீடு
அதாவது பல நட்சத்திர ஜோடிகளும் நேற்று காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வந்தனர். அதேபோன்று ஆயிஷாவும் தன் காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த காதலர் தினம் எனக்கு சிறப்பானது என குறிப்பிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காதலருடன் ஆயிஷா

மேலும் திருமணம் எப்போது என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே மூன்று பேரை கழட்டி விட்ட ஆயிஷாவுக்கு இந்த காதலாவது நிலைக்குமா என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. தற்போது ஆயிஷாவின் இந்த காதல் திருமணத்தில் முடிஞ்சா சரிதான் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Also read: பிக் பாஸில் ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம்.. இவ்வளவு லட்சங்களா?