அய்யனார் துணை சீரியலில் ஊர் முன்னாடி நிலாக்கு தாலி கட்டிய சோழன்.. சேரனிடம் சத்தியம் பண்ணிய தம்பி

ayyanar thunai (1)
ayyanar thunai (1)

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றாய் அய்யனார் துணை சீரியலில், நடேசன் குடும்பத்தில் எந்த பொண்ணு வந்தாலும் ஒரு நாள் கூட தங்காது. வீட்டை விட்டு போய்விடும் என்று ஊர் மக்கள் சேர்ந்து ஒரு முத்திரையை குத்தி விட்டார்கள். இதனால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் ஊர்காரங்கள் முன்னாடி கேலியும் கிண்டலமாக தான் இருந்து வந்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் விதமாக தான் தற்போது நிலாவின் என்டரி அமைந்திருக்கிறது. அதாவது சோழன் மீது ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணவில்லை என்றாலும் நிர்பந்தத்தினால் கல்யாணம் ஆகி இருக்கிறது. சட்டப்படியும் பதிவு பண்ணியாச்சு இனி யார் நினைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது என்று சோழன், நிலாவை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்.

ஆனால் நிலா பொறுத்தவரை இந்த கல்யாணம் சும்மா ஒரு பொம்மை கல்யாணம் தான். நம் நாம் நினைத்தபடி வாழலாம் என்று ஆசையுடன் வந்தார். ஆனால் இது எதுவும் தெரியாத சேரன் இவர்கள் இருவருக்கும் வரவேற்பை ஏற்படுத்தி வைத்தார். அதன் பிறகு தான் சேரனுக்கே உண்மை தெரிய வந்தது, நிலாவுக்கு விருப்பம் இல்லாமல் தான் இந்த கல்யாணம் நடந்திருக்கிறது என்று.

அந்த வகையில் ஊர்க்காரங்க முன்னாடி இந்த வரவேற்பு நடக்காது என்று சேரன் சொல்ல வரும் பொழுது நிலா வரவேற்புக்கு கிளம்பி தயாராக வந்து விட்டார். ஊர்காரங்க முன்னாடி இந்த குடும்பம் நம்மளால் அவமானப்படக்கூடாது என்ற காரணத்திற்காக நிலா, சோழன் கூட மணமேடையில் நின்று விட்டார். உடனே ஊர் மக்களும் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து விட்டார்கள்.

அத்துடன் நடேசன் இவங்க முன்னாடியும் உன்னுடைய கல்யாணம் நடக்க வேண்டும் என்று மாலையை கொண்டு வந்து இரண்டு பேரையும் மாற்ற வைத்து விட்டார். அத்துடன் புதுசாக தாலியைக் கொண்டு வந்து நிலா கழுத்தில் சோழனை தாலி கட்ட வைத்து விட்டார். நிலாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த நேரத்தில் எதுவும் பண்ண முடியாத ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு விட்டார்.

ஆனால் சோழன் ஆசையுடன் தான் தாலி கட்டினார். இதையெல்லாம் பார்த்து குற்ற உணர்வில் சேரன் எப்படியாவது இந்த பொண்ணு மனசு மாறி இந்த குடும்பத்துக்கு ஒரு மருமகளாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அடுத்து பங்க்ஷன் எல்லாம் முடிந்த நிலையில் சேரன், சோழனிடம் உங்க கல்யாணத்தைப் பற்றி நீ ஆரம்பத்திலேயே என்னிடம் சொல்லி இருந்தால் நான் இந்த ஏற்பாட்டை பன்னிருக்க மாட்டேன் ஏன் என்னிடம் மறைத்தாய் என்று கேட்கிறார்.

அதற்கு சோழன் எனக்கு நிலாவை ரொம்ப பிடிக்கும், நான் விரும்பி தான் கல்யாணம் பண்ணினேன். அதனால் அந்த பொண்ணுக்கும் என் மீது காதல் வந்துவிடும், என்னுடனே சேர்ந்து வாழ்ந்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம் குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் ஆகவும் இருப்பாள் என்று சத்தியம் பண்ணும் அளவிற்கு சேரனிடம் நம்பிக்கை கொடுத்து பேசுகிறார். அதனால் எப்படியும் நிலா அந்த குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் அந்த வீட்டிலேயே இருந்து செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்வார்.

Advertisement Amazon Prime Banner