வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

புது செழியனை அடித்த எழில்.. அழுது புலம்பிய பாக்யா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் பாக்யாவிற்கு தன்னுடைய கணவன் விவாகரத்து செய்துகொள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார் என்பதைத் தெரியாமலே பாக்யா, கோபி உடன் நீதிமன்றம் சென்றிருக்கிறார்.

இன்னிலையில் நீதிபதி பாக்யாவிடம் எந்த காரணத்திற்காக விவாகரத்து பெற நினைக்கிறீர்கள்? என கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த பாக்யா, கோபியின் சட்டையைப் பிடித்து உள்ளுக்குகிறாள். இதெல்லாம் கோபியின் கனவாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி வீட்டில் கோபியின் அப்பா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்டதால் பாக்யாவிற்கு பணம் தேவை அதிகரிக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்று செழியனிடமும் கோபியிடமும் பணம் கேட்கிறாள்,

அவர்கள் இருவரும் அவமானப்படுத்தி பணம் கொடுக்கின்றனர். இதனைப் பார்த்த மருமகள் ஜெனி, தன்னுடைய அப்பாவிடம் செலவிற்கு ஒரு லட்சம் பணம் கேட்கிறாள். அந்த பணத்தை வாங்கி மாமியார் பாக்யாவிடம் கொடுக்க ஜெனி நினைத்திருந்தாள்.

ஆகையால் ஜெனி கேட்டதும் உடனே ஜெனியின் அப்பா ஜோசப், செழியனை அழைத்து பணம் கொடுக்க, இதனால் ஜெனி மற்றும் செழியன் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. இடையில் போல பாக்கியாவிடம் செழியன் தரக்குறைவாக பேசியதால், எழில் செழியனை அடித்து விடுகிறான்.

இவ்வாறு பணத்திற்காக குடும்பத்தில் சண்டை ஏற்படுவதை பார்த்த கோபியின் அப்பா அம்மா இருவரும் கிராமத்திற்கு சென்று விடலாம் என முடிவெடுத்த அதை பாக்யாவிடம் தெரிவிக்கின்றனர். ஆனால் பாக்யா ‘என்னை விட்டு சென்று விடாதீர்கள்’ என அழுதுகொண்டே கெஞ்சி கேட்கிறாள்.

Trending News