Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மனைவி கூட படுக்க இவ்வளவு பில்டப்பா.. எரிச்சலை கிளப்பும் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் கல்லூரியில் படித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி முடிவெடுத்து கடந்த சில நாட்களாகவே பாக்யாவை சுத்தமாக ஒதுக்க துவங்கி விட்டான். […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் கல்லூரியில் படித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி முடிவெடுத்து கடந்த சில நாட்களாகவே பாக்யாவை சுத்தமாக ஒதுக்க துவங்கி விட்டான்.

இவ்வாறு வயசுப்பசங்கலையே மிஞ்சும் அளவுக்கு ஓவர் சேட்டை செய்யும் கோபியை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர். அதற்கேற்றார் போல் இன்று ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சியில் தரமான சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது .

தற்போது பத்தாம் வகுப்பு முடித்த கோபியின் மகள் இனியாவிடம் பாக்யா செல்போன் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்ததால், தன்னுடைய அறையில் அம்மா பாக்யா இனிமேல் தங்கக் கூடாது என குடும்பத்தினரிடம் இனியா பஞ்சாயத்து வைக்கிறாள்.

இதற்கு கோபியின் அம்மா, பாக்யாவை கணவர் கோபியின் ரூமில் படுக்கும்படி சொல்ல, பதறியடித்து கோபி எனக்கு பிரைவசி போய்விடும். பாக்யா தொனதொனவென்று பேசிக்கொண்டே இருப்பாள் என கூறுகிறான்.

இதை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் மனைவியுடன் சேர்ந்து ஒரே ரூமில் படுப்பதற்கு இவ்வளவு பில்டப்பா என கண்டபடி திட்டி தீர்க்கின்றனர். அத்துடன் பாக்யாவை கோபி எந்த அளவிற்கு தரை மட்டமாக நினைத்து கொண்டிருக்கும்  என்பது இதில் தெரிய வருகிறது.

மேலும் பாக்யாவை தன்னுடைய மனைவி என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து கவலைப்படும் எழில் மற்றும் தாத்தா இருவருக்கும் கோபியின் அம்மா எடுத்த இந்த முடிவு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பிறகாவது கோபி பாக்யாவை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.