வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நிறைய பேரு டவுட் இப்ப கிளியர் ஆனா சரி.. கோபி வெளியிட்ட பகீர் வீடியோ!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு, தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் ராதிகா, கோபி தன் பாக்யாவின் கணவர் என தெரிந்ததும் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயம் பாக்யாவிற்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால், அது ராதிகா தான் என தற்போது தெரியவந்துள்ளது.

இப்படி பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ், சோஷியல் மீடியாவில் கோபியின் கதாபாத்திரத்தை குறித்து விளக்கம் அளித்து இருக்கும் வீடியோ வைரலாகிறது.

இதில், ’23 வயதில் திருமணம் ஆன கோபிக்கு உடல் பசியின் காரணமாகவே திருமணமான பாக்யா உடன் 3 குழந்தைகள் பிறந்தது. ஆனால் அவன் மனதார காதலித்த ராதிகாவை 25 வருடங்கள் கழித்து பார்த்த பிறகு தூங்கிக்கொண்டிருந்த காதல் பற்றி எரிகிறது’ என கோபியின் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.

இவர் இப்படி பேசியது சின்னத்திரை ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு உடல் பசி, மன பசி என பாகுபாடு பார்த்து செய்த தவறை நியாயப்படுத்தினால், இந்த உலகம் கெட்ட அழிந்து போய்விடும். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என நம் முன்னோர்கள் கட்டுப்பாடுடன் வாழ்ந்து காட்டியது எல்லாம் சுத்த வேஸ்ட் ஆகிவிடும்.

இருப்பினும் சீரியல் என்று பார்த்தால் இப்படிப்பட்ட கதைக்களம் தான் ரசிகர்களை வெகுவாக கவரும். அதை சரியாகப் புரிந்து கொண்ட பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குனர் இந்த சீரியலை சிறப்பாக கொண்டு செல்கிறார் என சின்னத்திரை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

அத்துடன் கோபியின் கதாபாத்திரம் தான் இந்த சீரியலுக்கு கூடுதல் வலு சேர்கிறது. ஏனென்றால் சீரியலை பார்ப்பவர்கள், ஒரு சில கேரக்டரை திட்டுகிறார்கள் என்றால் அந்த கேரக்டர் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அப்படிப்பட்ட கதாபாத்திரம்தான் கோபி.

Trending News