விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருபத்தி ஐந்து வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த, மனைவி பாக்யாவை நிரந்தரமாக விவாகரத்து பெற கோபி முடிவெடுத்துவிட்டான். அதுமட்டுமின்றி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவையும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறான்.
இருப்பினும் ராதிகாவும் பாக்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்த விஷயம் பாக்யாவிற்கு ராதிகா மூலம் தெரிகிறது. ஆனால் பாக்யாவிற்கு ராதிகா திருமணம் செய்து கொள்ளப் போவது கோபிதான் என்ற உண்மை தெரியாது.
இருப்பினும் வீட்டு வேலைக்காரி செல்விக்கு கோபியின் மீது லேசாக சந்தேகம் ஏற்படுகிறது. ஆகையால் அடிக்கடி செல்வி, கோபியை பற்றி பாக்யாவிடம் தெரியப் படுத்துகிறாள். இருப்பினும் முட்டாள் பாக்யா, கொஞ்சம் கூட முழித்துக் கொள்ளாமல் கோபியை கண்மூடித்தனமாக நம்பி செல்வியை கண்டபடி திட்டுகிறார்.
அதுமட்டுமின்றி செல்வியின் கணவர் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை மனதில் வைத்துக்கொண்ட பாக்யா, உன்னுடைய கணவர் போல் என்னுடைய கணவனின் நடத்தையில் சந்தேகப்படுக்கிறாயா! என நடுரோட்டில் வைத்து செல்வியை கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்.
அதுமட்டுமின்றி செல்வியை இனி வேலைக்கு வரவேண்டாம் என்றும், தன்னுடைய முகத்திலேயே முழிக்க கூடாது என்றும் பாக்யா பேசி விடுகிறார். இருப்பினும் பாக்யா செல்வி திட்டியதற்கு வீட்டிற்கு சென்ற பின் மனக்கஷ்டம் படுவாள்.
ஆனால் தன்னுடைய கணவரை தவறாக பேசுவதை கூட தாங்க முடியாத பாக்யாவிற்கு, செல்வி சொன்னது உண்மை என்று தெரிந்ததும் நெருங்கி போகப் போகிறார். இருப்பினும் எழில் மற்றும் மாமனார் மாமியார் பிள்ளைகள் உள்ளிட்டோர் பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து கோபியின் துரோகத்தை மறக்க உறுதுணையாக இருக்கப் போகின்றனர்.