விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ஏற்கனவே விவாகரத்து ஆன கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி முடிவெடுத்துவிட்டான்.
இதற்காக பாக்யாவிற்கு தெரியாமலே விவாகரத்து பத்திரத்தில் கோபி கையெழுத்து வாங்கி அதை வக்கீலிடம் கொடுத்து நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என முறையிட்டுள்ளார். இதனால் கோர்ட்டில் இருந்து பாக்யா மற்றும் கோபி இருவரையும் முதல் வாய்தாவிற்காக வரச்சொல்லி வீட்டிற்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
எனவே நீதிமன்றத்தில் இருந்து வந்த கடிதத்தை பாக்யாவின் மருமகள் ஜெனி வாங்க, அதன் பிறகு அதை எழில் திறந்து படித்துப் பார்க்க முயல்கிறான். ஆனால் கோபி உடனே வந்து, எனக்கு வந்த கடிதத்தை நாகரிகம் இல்லாமல் படிக்கிறாயா? என எழிலை திட்டி விட்டு அந்த கடிதத்தை பற்றி யாருக்கும் எதுவும் சொல்லாமல் மாடியில் தனது ரூமிற்கு விரைந்து செல்கிறான்.
இருப்பினும் எழிலுக்கு கோபியின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அத்துடன் விவாகரத்து பெற நினைக்கும் விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் எப்படி விவாகரத்தை பெற முடியும்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப தன்னை நல்லவன் போல் நடித்து நாடகமாடிக்கொண்டிருக்கும் கோபி கூடிய விரைவில் பாக்யாவிடம், ‘எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்பதை போட்டு உடைத்து தன்னுடைய முகத்திரையை கிழிக்க போகிறான்.
அதன் பிறகு ராதிகாவுடன் சேர்ந்து வாழப் போகும் கோபியை, வீட்டில் இருக்கும் அம்மா அப்பா பிள்ளைகள் அனைவரும் உதறி எறிய போகின்றனர். பாக்யாவும் கோபியை அடியோடு வெறுத்து தன்னுடைய பிள்ளைகளுக்காக இனிவரும் நாட்களில் வாழ துணிவாள்.