புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சீரியல முடிங்கடானா தாத்தாவை முடிச்சுட்டாங்க.. வைரலாகும் பாக்கியலட்சுமி மீம்ஸ்

Baakiyalakshmi : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது எதிர்பாராத நிகழ்வாக ராமமூர்த்தி தாத்தா உயிரிலிருந்து விடுகிறார். இரவு முழுக்க மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பேசி விட்டு படுத்த ராமமூர்த்தி காலையில் பேச்சு மூச்சி இன்றி இருக்கிறார்.

மேலும் பாக்கியலட்சுமி தொடரின் ஆணிவேராக இருந்த தாத்தாவின் கேரக்டர் இப்போது முடிவுக்கு வந்த நிலையில் இந்த தொடரை பற்றி மீம்ஸ்கள் வந்திருக்கிறது. சீரியல முடிங்கடான்னா தாத்தாவை முடிச்சுட்டாங்க என கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

baakiya
baakiya

ஏனென்றால் பல வருடமாக ஒரே கதையை உருட்டி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு எண்டு கார்ட் போடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார். இந்த சீரியல் முடியாது போல இப்போது தான் தாத்தாவின் கதையை முடித்திருக்கிறார்கள்.

baakiyalakshmi
baakiyalakshmi

பாக்கியலட்சுமி தொடரின் வைரல் மீம்ஸ்

நேற்றைய எபிசோடில் தாத்தா அருமையாக நடித்திருந்தார் என்றும் அவருக்காக தான் இந்த தொடரை சகிக்க வேண்டியதா இருக்கு என்று மீம்ஸ் செய்துள்ளனர். அய்யய்யோ எனக்கு இந்த டைரக்டர நினைச்சா கொஞ்சம் பயமா இருக்கு?

bakiyalakshmi-memes
bakiyalakshmi-memes

நான் இதே மாதிரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ல லட்சுமி அம்மாவின் சாவு ஊர்வலத்தில் தத்ரூபமா காட்டணும்னு ஒரு வாரம் நம்மள எமோஷனலாக்கி விட்டுட்டாங்க. இதையும் அப்படித்தான் பண்ணுவாங்க.. கொஞ்ச நாள் விஜய் டிவி ஆன் பண்ணாம இருக்கணும்.

ishwari-memes
ishwari-memes

அடுத்ததாக பாக்கியலட்சுமி மற்றும் பழனிச்சாமியின் கல்யாணம் நடந்தால் ஈஸ்வரியின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பது வந்துள்ளது. இது மட்டும் நடந்துச்சு அவ்வளவுதான், கிழவி நெஞ்சுவலி வந்து உயிரை விட்டுடும் போல, அதான் கிளைமாக்ஸ் என்று கலாய்த்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் மீம்ஸ்

Trending News