கோபியை விட கொடூரமாக நடந்து கொள்ளும் மகன்.. சுத்தி சுத்தி அடிவாங்கும் பாக்யா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத் தலைவியான பாக்யா இல்லத்தரசியாக இருப்பதினால் என்னன்ன பிரச்சனையை சமாளிக்கிறார் என்பதை பாக்கியலட்சுமி சீரியலில் அழகாக வெளிப்படுத்துகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பாக்யா வீட்டு செலவிற்காக இந்த மாதம் பத்தாயிரம் ரூபாய் மட்டும் அதிகமாக தாருங்கள் என கணவர் கோபியிடம் கேட்கிறாள்.

அதற்கு கோபி, ‘எப்பொழுது என்னிடம் வந்து பேசினாலும் எவ்வளவு பணம் கேட்கப் போகிறாய்  என பயமாய் இருக்கிறது’  என்று கூறி பாக்யாவை அசிங்கப்படுத்துகிறான். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத பாக்யா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாமனார் மருந்து செலவிற்காக கோபியிடம் வெட்கத்தைவிட்டு காசு கேட்கிறாள்.

அதன் பிறகு அந்தப் பணமும் பத்தாததால் மூத்த மகன் செழியனிடம் பணம் கேட்கச் சொல்கிறாள். ஆனால் செழியன், ‘பசங்களுக்கு செலவு செய்வது எல்லாம் பெற்றவர்களின் கடமை இன்னும் அந்த அளவுக்கு என்னுடைய நிலைமை வரல என ஏற்கனவே நான் கொடுத்த காசை திருப்பிக் கொடுத்து டயலாக் அடிச்சியே அம்மா, இப்ப எதுக்கு என்கிட்ட வீட்டு செலவுக்கு பணம் கேக்குற’ என பாக்யாவின் நிலமையை புரிந்து கொள்ளாத செழியன் பாக்யாவின் மனம் நோகும்படி பேசுகிறான்.

இதை கூட இருந்து கேட்டுக்கொண்டிருந்த மருமகள் ஜெனி, செழியனை இப்படி பேசக்கூடாது என திட்டுகிறாள். ஆனால் செழியன், ‘நான் என் அம்மா கிட்ட பேசுறேன் நீ சும்மா இரு’ என ஜெனியை வாயை அடைக்கிறான்.

எனவே கோபி திட்டுவது பத்தாமல் மகன் செழியனும் பாக்யாவை கஷ்டப்படுத்துகிறான். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை சுத்தி சுத்தி அடி வாங்குவது பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. இருப்பினும் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பாக்யாவிற்கு உறுதுணையாக இருந்து செயல்படுகின்றனர்.

குறிப்பாக இளைய மகன் எழில், சம்பாதிக்கும் முழுப்பணத்தையும் பாக்யாவிடம் கொடுத்து, வீட்டு செலவிற்காகவும் தாத்தாவின் மருந்து செலவிற்காக பயன்படுத்திக் சொல்லுங்கள் என பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறான் .

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →