வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புதுவிதமான பிரம்மாண்டத்தில் உருவாகும் பாபா.. இந்த காட்சியல்லாம் தூக்குங்க என கட்டளையிட்ட ரஜினி

கோலிவுட்டில் ஜாம்பவானாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் இளம் ஹீரோக்களையும் பொறாமைப்படுத்தும் வகையில் இருக்கும். இவருடைய படங்கள் அனைத்தையும் அவருடைய ரசிகர்கள் திருவிழா கொண்டாடுவார்கள்.

இப்படி சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அகராதியில் தோல்வி என்பது இருக்கக் கூடாது என நினைப்பவர். ஆகையால் அவருடைய பிளாப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்காக தற்போது பக்கா பிளான் போட்டிருக்கிறார்.

Also Read: இரண்டு முறை நேஷனல் அவார்ட் வாங்கிய 2 ஹீரோயின்கள்.. ரஜினியே வியர்ந்து பார்த்த அந்த நடிகை

2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை பெற்ற படமானது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, லோட்டஸ் இன்டர்நேஷனல் தயாரித்தார். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நல்ல கதையம்சம் கொண்ட இந்த படம் படுதோல்வியை தந்ததால், ரஜினிக்கு பாபா படத்தால் ஏற்பட்ட கெட்ட பெயரை அழிப்பதற்காக அந்த படத்தை மீண்டும் வெளியிட ரஜினி கட்டளை இட்டிருக்கிறார்.

Also Read: 47 அவார்டை குவித்த என் படத்தை பாராட்ட யாருமில்லை.. சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக தாக்கிய தயாரிப்பாளர்

காரணம் ரஜினியின் அனைத்து படங்களும் வெற்றி என்ற வரிசையில் திடீரென பாபா படுதோல்வி அடைந்தது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அந்தப் படத்தை தூசி தட்டி ரெடி பண்ண இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கூறியிருக்கிறார். படம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கும் என்று எண்ண வேண்டாம். இதில் புதிய காட்சிகள் மற்றும் புதிய கிளைமாக்ஸ் இடம்பெறுகிறது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸில் இருக்கின்றன, தேவைப்பட்டால் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கிறார். இதனால் பாபா படம் பார்க்கும்போது புதிய படமாக தூண்டும் என்பது மாற்றம் இல்லை. இது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்காக ரஜினி 10 முதல் 15 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: தோல்வி என் அகராதியிலேயே இருக்கக் கூடாது.. பிளாப் படத்தை வெற்றியாக மாத்த ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்

Trending News