புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உயிருக்கு போராடும் பாபா , பிதாமகன் பட தயாரிப்பாளர்.. சூர்யா போல் இறங்கி வருவாரா ரஜினி?

தமிழ் சினிமா நடிகர் சங்கம் நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்வதாக அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது பேட்டி அளிக்கின்றனர். ஆனால் பல நடிகர், நடிகைகள் தாங்கள் பொருளாதார ரீதியாக, உடல் நல ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம், எங்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அப்படி சமீபத்தில் வைரலாகி கொண்டிருக்கும் செய்தி தான் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பண உதவி தேவைப்படுவதாகவும் சொல்லியது தான். பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சத்யராஜ், விஜயகாந்த் போன்றோரின் படங்களை தயாரித்தவர் தான் அந்த தயாரிப்பாளர்.

Also Read: ரஜினி, விஜய்க்காக நடக்கும் போர்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் மட்டமான செயல்

என்னம்மா கண்ணு ,லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா போன்ற படங்களின் தயாரிப்பாளரும். பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளருமான வி ஏ துரை சர்க்கரை வியாதியினால் நோய்வாய்ப்பட்டு தற்போது உயிருக்கு போராடும் நிலைமையில் இருக்கிறாராம்.

இதுவரை எந்த நடிகரும், எந்த இயக்குனரும் இவரை கண்டு கொள்ளவில்லை. இவரால் வளர்ந்த இயக்குனர்கள் கூட இவரை வந்து பார்க்கவில்லை. இந்த விஷயம் ரஜினிக்கு தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. தெரிந்தால் கண்டிப்பாக அவர் உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரும் யாராவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: மொத மொதல்ல சினிமால அத உடைச்சது தலைவர் தான்.. ரஜினியின் ரகசியத்தை உடைக்கும் நட்டி

உயிர் போறதுக்கு முன்னாடி யாராவது வந்தால் சரி, அதற்கு அப்புறம் இவர் அப்படி, இப்படி என்று பேட்டி கொடுக்க யாரும் வர வேண்டாம் என்று இவரது நண்பர்கள் கூறி வருகின்றனர். நடிகர் சூர்யா இதுபோன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறார். தற்போது ரஜினிகாந்த் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு உதவுவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமா இது போன்ற பல நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. சினிமாவில் நன்றாக கொடி கட்டி பறந்தவர்கள் சட்டென காணாமல் போய் விடுகிறார்கள். பின்னர் ஏதாவது ஒரு மீடியா மூலம் அவர்களுடைய நிலை தெரிய வருகிறது. இது போன்ற செய்திகள் வெளி வரும் போது பெரிய நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்கிறார்கள். ரஜினியும் கண்டிப்பாக இந்த தயாரிப்பாளருக்கு உதவ வாய்ப்பிருக்கிறது.

Also Read: திருமணத்திற்கு பின்னும் ரஜினிக்கு தொடர்ந்த பிரச்னை .. பாலசந்தரிடம் சரணடைந்த லதா ரஜினிகாந்த்

Trending News