செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Shruti Hassan: கமலின் முதல் மனைவி சரிக்காவுடன் பேபி சுருதிஹாசன்.. 30 வருடத்திற்கு முன் எடுத்த வைரல் புகைப்படம்

Shruti Hassan: சுருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தாலும் இங்கே விட தெலுங்கில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த வால்டர் வீரய்யா, வீரசம்மா ரெட்டி, சலாம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டது.

இதனால் தற்போது சுருதிஹாசனின் மார்க்கெட் அங்கே எகிறி விட்டது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் உடன் இனிமேல் என்ற ஆல்பத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து இவர் காதலித்து வந்த சாந்தனு ஹஷாருவை பிரிய போவதாக சில விஷயங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

குடும்பப் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

shruti hassan
shruti hassan

இந்த சூழலில் நேற்று சுருதிஹாசன் அவருடைய இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை சுருதி அப்பா கமல் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்ட அறையில் இருந்து எடுக்கப்பட்டதாக பதிவிட்டு இருக்கிறார்.

அதில் 30 வருடத்திற்கு முன் பேபியாக இருக்கும் சுருதிஹாசனை கமல் கையில் தூக்கி வைத்துக்கொண்டு அப்பொழுது மனைவியாக இருந்த சரிக்கா உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்க்க முடிகிறது. அதை பார்க்கும் பொழுது இளமை பருவத்தில் இருக்கும் கமல் மற்றும் அன்பான மனைவி, பாசமான மகளுடன் இருக்கும் ஒரு குடும்ப புகைப்படத்தை பார்ப்பது போல் இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Trending News