திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மோசமான கதாபாத்திரத்தால் வாய்ப்பை இழந்த கனவுக்கன்னி.. கொடிகட்டிப் பறந்த நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

தனது அட்டகாசமான நடனத்திலும் அழகினாலும் ஒரு ரவுண்டுவந்த நடிகை தற்போது வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்மணி கூட நடித்தவர்களெல்லாம் பெரும் நடிகர்கள். அதனால் அவர்களிடம் வாய்ப்பு கேட்டு தூதுவிட்டு இருக்கிறாராம்.

அக்கட தேசத்தை பூர்விகமாக கொண்ட நடிகை தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வந்த நிலையில் குடும்ப பெண்களிடம் அவருக்கென்று ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நடிகை இப்பொழுது எந்த கேரக்டர் இருந்தாலும் நடிக்கத் தயார் என்று நம்பிய வட்டாரங்களிலும் கூறி வருகிறாராம்.

அம்மணி நடித்த பேய் படம் ஒன்று குடும்ப பெண்களிடம் அவரை எளிதாக கொண்டு சென்றது. அதிலிருந்து அவருக்கு தமிழ் ரசிகர்களிடம் மதிப்பும், மரியாதையும் இருந்து வந்தது. அதன்பின் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார் என்று கூடக் கூறலாம்.

அவர் எடுத்து நடித்த ஒரு கதாபாத்திரம் அவரது மொத்த சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்று கூட சொல்லலாம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த நடிகை, ஏன் அந்த கதாபாத்திரத்தை நடித்தோம் என்று நினைக்கும் அளவிற்கு அது அம்மணியின் வளர்ச்சியை கொடுத்தது.

ஆர்யாவுடன் நடித்த அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தாலும் அதன்பின் அந்த படத்தினால் பல பிரச்சனைகளை சந்தித்து துவண்டு போயினார். ஓரளவு சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று நினைத்து இனி கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசித்து, அதற்கும் முடிவு எடுத்து வந்தார்.

கல்யாணத்தை பற்றி யோசித்த அந்த நடிகைக்கு அதுவும் கைகொடுக்கவில்லை. இப்பொழுது எந்த பக்கமும் சரிவராமல் துவண்டு போய் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தவர், மருத்துவரும் மூலம் தனது பழைய ரம்மியமான தேகத்தை வரவழைக்க திட்டம் போட்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். கூடிய விரைவில் தமிழ் சினிமாவில்  நடிகையை பார்க்கும் சந்தர்ப்பம் வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Trending News