சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மாதவனை காலி செய்ய அப்பா இயக்குனர் செய்த மட்டமான வேலை.. உஷராக தப்பித்துக் கொண்ட சாக்லேட் பாய்

Actor Madhavan: 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகர் மாதவன். முக்கால்வாசி இவர் நடித்த படங்கள் காதல், ரொமான்டிக் போன்ற படங்களாகத் தான் இருக்கும். அந்த வகையில் அப்பொழுது முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நடித்து வந்தார்.

அப்பொழுது இவருடைய கேரியரை காலி பண்ண வேண்டும் என்று ஒரு நடிகரின் அப்பா பல மட்டமான விஷயங்களை செய்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை முன்னணி நடிகராக உச்சக்கட்டத்தில் தற்போது இருக்கும் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தான். அதாவது மாதவன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய் படிப்படியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தார்.

Also read: 5 தமிழ் படங்களோடு முடிந்த சகாப்தம்.. மாதவன் கேரியரை தூக்கி நிப்பாட்டிட்டு ஐட்டம் டான்சராக மாறிய நடிகை

அந்த நேரத்தில் விஜய்யை விட வேற யாரும் மிஞ்சிவிடக் கூடாது என்பதற்காக மற்ற ஹீரோக்களை வளர விடாமல் தடுத்து இருக்கிறார். அதற்காக சில படங்களை இயக்கி அதில் குறிப்பிட்ட நடிகர்களை நடிக்க வைத்து அவர்களுடைய மார்க்கெட்டையை காலி செய்து இருக்கிறார். அப்படித்தான் மாதவனையும் காலி பண்ண திட்டம் போட்டிருக்கிறார்.

அதாவது விஜய்யும், மாதவனும் கிட்டத்தட்ட பிரபலமாகி வந்த நேரத்தில் விஜய்யை விட மாதவனுக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர். அதனால் இவரை காலி பண்ண வேண்டும் என்று நினைத்து மாதவனிடம் ஒரு கதையை இயக்குனராக கூறியிருக்கிறார். ஆனால் மாதவனுக்கு அந்த கதையின் மீது பெருசாக விருப்பம் இல்லாததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

Also read: வளர்ந்து வந்த ஹீரோக்களை வேரோடு வெட்டிய எஸ்ஏசி.. தளபதிக்காக போட்ட மாஸ்டர் பிளான், இப்ப நிலைமை வேற

அதன் பின்னும் எஸ்ஏசி அவரை விடாமல் வேறு ஒரு கதையை தயார் செய்து இருக்கிறார். ஆனால் மாதவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அவருடைய வற்புறுத்தலால் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதை பற்றி மாதவன் அவருடைய மேனேஜரிடம் சொல்லி இருக்கிறார். உடனே மேனேஜர் தயவு செய்து இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம்.

இதில் மட்டும் நடித்து விட்டால் உங்கள் கேரியரை க்ளோஸ் ஆகிவிடும் என்று கூறி இருக்கிறார்.
மேலும் விஜய்யின் அப்பாவுக்கு எப்பொழுதுமே இதே தான் வேலை, ஒரு நடிகர் கொஞ்சம் வளர்ந்து விட்டால் அவர்களை எப்படி காலி பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். தற்போது அவருடைய கவனம் உங்கள் மீது திரும்பி விட்டது. தயவு செய்து இதிலிருந்து எப்படியாவது தப்பித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்படியே மாதவனும் நேரடியாக விஜய்யின் அப்பாவிடம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் வேறு ஒரு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு இப்பொழுது நேரம் இல்லை என்று கூறி சரியான நேரத்தில் உஷாராகி தப்பித்திருக்கிறார்.

Also read: புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

Trending News