புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு போனது இதுக்கு தானா?. மட்டமான வேலை செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

Bharathi Kannamma Venba: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே ஃபரீனா. ஆரம்பத்தில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சில தொடர்களில் ஃபரீனா நடித்து வந்தார்.

இந்த சூழலில் பாரதிகண்ணம்மா தொடர் இவருக்கு மிக பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. இதில் வில்லி வெண்பாவாக ஃபரீனா நடித்து அசத்திருந்தார். பாரதி கண்ணம்மா தொடர் முடிந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. ஆனால் இந்த தொடர் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

Also Read :குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

இதைத்தொடர்ந்து ஃபரீனா அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டக்கர் டக்கர் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சத்திற்காக தான் இது போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் வேடிக்கை என்ற பெயரில் ஃபரீனா இதில் கேட்கும் கேள்விகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் படியாக இருக்கிறது. சீரியல் பிரபலங்களை இந்த நிகழ்ச்சியில் வர வைத்து இரண்டு அணிகளாக பிரித்து சில விளையாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இதில் சில வரம்பு மீறி பேச்சுகளும் இடம் பெற்றிருக்கிறது.

Also Read : ரகசியமாக விஜய் டிவி பிரபலத்துடன் 2வது திருமணம் செய்த நடிகை.. புடிச்சாலும் புடிச்ச புளியங்கொப்பை

இவ்வாறு ஒரு பொது நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக இருக்கிறது. விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்தாலும் ஃபரினாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஜீ தமிழில் இவ்வாறு மட்டமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனது பெயரை முழுவதுமாக டேமேஜ் செய்து கொண்டார்.

இதற்கு பேசாமல் வேறு நல்ல சீரியலில் ஃபரினா நடிக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். மேலும் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக மாட்டார்கள். நகைச்சுவையையும் அடுத்தவர்களை புண்படுத்தாமல் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தாலே நிகழ்ச்சிகள் நல்ல டிஆர்பியை பெரும்.

Also Read : விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் உயிரை விட்ட 3 பிரபலங்கள்.. சூனியம் பிடிச்சதா இருக்கும் போல!

Trending News