வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலாவை பகைத்ததால் சூர்யாவிற்கு ஆரம்பித்த கெட்ட நேரம்.. விக்ரமையே மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசி

Bala and Vanangaan: இயக்குனர் பாலாவை பொறுத்தவரை ஹீரோக்காக கதையை எடுக்கக் கூடியவர் அல்ல. ஒரு கதையை தயார் செய்து அதில் ஏதாவது ஒரு ஹீரோவை நடிக்க வைத்து வெற்றியை கொடுக்கக்கூடிய திறமைசாலி. அதிலும் விருதுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக கூடியவர். அந்த வகையில் இவரிடம் சிக்கிய ஆர்டிஸ்ட்களை படாத பாடு படுத்தி எந்த அளவிற்கு பென்டை கழட்ட முடியுமோ அந்த அளவிற்கு சக்கையாக பிழிந்து விடுவார்.

அதனால் தான் என்னமோ இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் விருது வாங்கி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லா ஹீரோக்கும் செட் ஆகுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஏனென்றால் தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பெரிய நடிகர்களுக்கு இமேஜ் என்பது ரொம்பவே முக்கியம் ஆகிவிட்டது.

அதனால் கொஞ்சம் மரியாதை இல்லை என்றாலும் அவர்கள் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து வெளியாகி விடுகிறார்கள். அப்படித்தான் பாலாவை நம்பி வணங்கான் படத்திற்கு சூர்யா கமிட்டாகி இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை பழைய சூர்யா என்று நினைத்து பாலா சீண்டிருக்கிறார். உடனே சூர்யா இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று பாலாவுக்கும் வணங்கான் படத்திற்கும் பெரிய கும்பிடு போட்டு விலகி விட்டார்.

சூர்யா எடுத்த முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்

இதற்கெல்லாம் அசரக்கூடியவர பாலா, உடனே இக்கதைக்கு ஏற்ற மாதிரி அருண் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேசி இருக்கிறார். அவர் ஏற்கனவே எப்படிடா ஒரு ஹிட் படத்தை கொடுக்கணும் என்று வெறியுடன் காத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் பொறி வலையில் சிக்கிய எலி போல் பாலாவிடம் மாட்டிக் கொண்டார்.

இவரை வைத்து படபிடிப்பை துவங்கிய பாலா, அருண் விஜய் ஆரம்பத்தில் மிகவும் அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்ததை ஒட்டி படத்தின் எதிர்பார்ப்பும் அருண் விஜய் மீது நம்பிக்கையும் வந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு அருன் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை பாலா செதுக்கியிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த மாதிரி உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரே நடிகர் விக்ரமாகத்தான் இருப்பார். ஆனால் இப்பொழுது அவரையே மிஞ்சும் அளவிற்கு அஜித்தின் விசுவாசியாக இருக்கும் அருண் விஜய் தூள் கிளப்பி விட்டார். தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதால் கூடிய விரைவில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார்கள்.

எந்த நேரத்தில் சூர்யா இப்படத்தை விட்டு வெளியேறினாரோ, அதைத்தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களும் கேள்விக்குறியாகவும் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. அதாவது வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதோடு சரி படப்பிடிப்பு எதுவும் ஆரம்பிக்கப்படாமல் கேள்விக்குறியிலேயே இருக்கிறது.

அதே மாதிரி சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் சூரியாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் இப்படமும் கைநழுவி போய்விட்டது. பாலாவை பகைத்தால் என்னமோ சூர்யாவிற்கு தொடர்ந்து கெட்ட நேரமாக அமைந்து வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா கங்குவா படத்தை மட்டுமே மொத்தமாக நம்பி இருக்கிறார். படம் வெளிவந்த பிறகு எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பார்க்க முடியும்.

தன் தலையிலே மண்ணள்ளி போட்ட சூர்யா

Trending News