புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வசிய மருந்தால் கைப்பாவையாய் மாறிய விஜய்.. பயில்வான் போட்டு உடைத்த உண்மைகள்

Bailvan Revealed Truth About Vijay: விஜய் தான் இப்போது மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். அவர் தன்னுடைய கட்சி அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே தாறுமாறான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் அடக்கம்.

அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். அதன்படி தற்போது விஜய்க்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருப்பது புஸ்ஸி ஆனந்த் தான் என்பது அனைவருக்குமே தெரியும். விறகு கடை முதலாளியாக இருந்த இவர் இப்போது விஜய்க்கு எல்லாமுமாக மாறிப் போயிருக்கிறார்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகரின் கனவும் ஆசையும். அவரையே ஓரம் கட்டி விஜய்க்கு நெருக்கமான ஒருவராக மாறி இருக்கிறார் இந்த புஸ்ஸி ஆனந்த். இதை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு முறை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

Also read: விஜய், விஷாலின் பதவி ஆசை.. சூப்பர் ஸ்டார் கொடுத்த நெத்தியடி பதில்

அதாவது புஸ்ஸி தன் மகனுக்கு கேரளா மந்திரவாதிகள் மூலம் வசிய மருந்து வைத்து விட்டார். அதனால் தான் விஜய் அவருடைய கண்ணசைவைக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்கிறார் என குறிப்பிட்டிருந்தார். அதை பற்றி சொல்லி இருக்கும் பயில்வான் விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னால் முக்கிய கட்சி தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதாவது விஜய் புஸ்ஸி ஆனந்த் மூலம் தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அதே போன்று தான் அமித்ஷாவுடன் ஆன மீட்டிங்கும் நடந்தது. அப்போது இந்த கட்சி தொடங்குவது குறித்த விஷயத்தை விஜய் சொல்லி இருக்கிறார்.

உடனே அமித்ஷா இப்போது அறிவிப்பை வெளியிடுங்கள். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறையும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் தான் திடீரென தன் கட்சி அறிவிப்பை விஜய் வெளியிட்டு இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also read: ஜெ-வுக்குஒரு சசிகலா, விஜய்க்கு ஒரு புஸ்ஸி ஆனந்த்.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ

Trending News