வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

3 வருட காதலால் உலக அழகியை தூக்கி எறிந்த சரத்குமாரின் வருங்கால மாப்பிள்ளை.. பயில்வான் சொன்ன ரகசியம்

Actress Varalakshmi: இப்போது மீடியாக்களின் பரபரப்பு செய்தி என்றால் அது வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்த கதை தான். சில தினங்களுக்கு முன்னர் எனக்கு நிச்சயதார்த்தம் முடித்துவிட்டது என அவர் வெளியிட்டு இருந்த போட்டோ பயங்கர வைரலானது.

அதை தொடர்ந்து யார் மாப்பிள்ளை என அவருடைய பூர்வீகத்தையே மீடியாக்கள் தோண்டி எடுத்தன. அதில் சரத்குமாரின் வருங்கால மாப்பிள்ளை ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இரண்டாவதாக வாக்கப்படும் வரலட்சுமி பற்றி ஏகப்பட்ட செய்திகள் புகைந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி மூன்று வருடமாக இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் பயில்வான் வரலட்சுமியின் வருங்கால கணவர் பற்றி ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.

Also read: வசிய மருந்தால் கைப்பாவையாய் மாறிய விஜய்.. பயில்வான் போட்டு உடைத்த உண்மைகள்

அதாவது நிகோலாய் முதலில் கவிதா என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். கலிபோர்னியா நாட்டு உலக அழகியான இவருடன் சில வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடின் காரணமாக விவாகரத்து நடந்துள்ளது.

இது பற்றி கூறியிருக்கும் பயில்வான் உலக அழகியை வரலட்சுமிக்காக விவாகரத்து செய்து விட்டார் என நக்கலாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் தான் விவாகரத்து நடந்துள்ளதால் அவருடைய முன்னாள் மனைவியும் மகளும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அதனால் வரலட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவர்கள் இருவருக்குள்ளும் ஈகோ என்று பார்த்தால் அது நடிப்பது சம்பந்தமாக இருக்கலாம். ஆனால் வரலட்சுமி இதை எல்லாம் முன்பே பேசிவிட்டு தான் இந்த நிச்சயதார்த்தத்தை நடத்தி இருப்பார் என பயில்வான் சில விஷயங்களை இட்டுக்கட்டி பேசியுள்ளார்.

Also read: 38 வயதில் 2-வது மனைவியாகும் வரலட்சுமி.. வைரலாகும் மாப்பிள்ளையின் முதல் மனைவி, மகள் புகைப்படங்கள்

Trending News