செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வடிவேலுவுடன் கிசுகிசுக்கப்பட்ட அம்பிகா.. எத்தனை புருஷனு லிஸ்ட் போட்ட பயில்வான்

Ambika : 80 மற்றும் 90களில் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகைகள் தான் அம்பிகா மற்றும் ராதா. உடன்பிறந்த சகோதரிகளான இவர்கள் இருவரும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

இப்போது சின்னத்திரை தொடர்களில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார். நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வரும் பயில்வான் இப்போது அம்பிகாவை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

அதாவது பத்திரிக்கையாளர்கள் அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அம்பிகா எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், எத்தனை கணவர் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னாராம்.

நடிகை அம்பிகாவை பற்றி விமர்சித்த பயில்வான்

இதை குறிப்பிட்ட பயில்வான் அம்பிகாவே இப்படி சொன்னதால் கணக்கம்போடும் அளவிற்கு அவருக்கு கணவர் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

அங்கு பல வருடங்கள் வசித்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பிறகு சென்னை திரும்பிய அவர் ரவிகாந்த் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

அதன்பின்பு அவரையும் பிரிந்து விட்டார். மீண்டும் அம்பிகா சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். கடைசியில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உடனும் அம்பிகா கிசுகிசுக்கப்பட்டார் என பயில்வான் கூறியிருக்கிறார்.

Trending News