ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆழம் தெரியாமல் காலை விட்ட பயில்வான்.. மரண காட்டு காட்டிய ஏ ஆர் ரகுமான்

ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து முடியை அறிவித்து விட்டனர். அதிலிருந்து சமூக வலைத்தளங்களில் எல்லாம் இவர்களது விவாகரத்து தான் ஹாட் டாபிக். குறிப்பாக பிரபலங்கள் சிலர் யூ ட்யூப் சேனல்களில் இவர்களது விவாகரத்தை பற்றி வாய்க்கு வந்தபடி பேசி வந்தனர்.

பயில்வான் ரங்கநாதன் மற்றும் பழைய ஜர்னலிஸ்ட் பாண்டியன் என இருவரும் ஏ ஆர் ரகுமான் கேரக்டரை பற்றி மிகவும் அவதூறு பரப்பி வந்தனர். அவர் இசைக்குழுவில் இருக்கும் பெண் ஒருவருடன், இவரை சேர்த்து வைத்து பேசினார்கள். இதுதான் அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை அதற்குத்தான் இந்த விவாகரத்து முடிவு எனவும் கூறி வந்தனர்.

பயில்வான் ரங்கநாதன் ஏ ஆர் ரகுமான் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்தது போல் வாய்க்கு வந்தபடி பேசினார். ஏ ஆர் ரகுமான் துபாயிலிருந்து மும்பை, மீண்டும் மும்பையில் இருந்து துபாய் என விமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தார் எனவும் கூறினார். இது அவரது மனைவி சாய்ரா பானுவுக்கு பிடிக்கவில்லையாம்

சென்னையில் உள்ள வீட்டுக்கு வருவதே இல்லையாம் அதனால் தான் அவர் துணைவியார் இந்த முடிவை எடுத்து விட்டார் என அனைத்து யூ ட்யூப் சேனல்களிலும் பேசி வந்தார் பயில்வான். இவரை விட ஒரு படி மேலே சென்ற ஜர்னலிஸ்ட் பாண்டியன் ஏ ஆர் ரகுமான், அவரது மனைவியை கொடுமைப்படுத்தினார் என பேட்டி கொடுத்தார்.

இப்பொழுது எல்லாத்துக்கும் முடிவு கட்டும் விதமாக ஏ ஆர் ரகுமான் சட்ட ரீதியாக அணுக உள்ளார் . இதில் அவர் மீது அவதூறு பரப்பிய அனைத்து சமூக ஊடகங்கள் மீதும் கேஸ் முடிவில் இருக்கிறார். அவருக்காக ஆஜராக திறமையுள்ள 100 வக்கீல் களத்தில் இறங்க உள்ளனராம். இப்பொழுது அவரது அறிக்கைக்கு பயந்து நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோவை நீக்கிவிட்டனர்.

Trending News