செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கருப்பு பணத்தை மாற்ற இப்படி எல்லாம் செய்யலாமா தல.. தோனியை கழுவி ஊற்றிய பயில்வான்

Dhoni: தோனிக்கு கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய பெயர் இருக்கிறது. அவருடைய ரசிகர்கள் இப்போதும் அவரை கொண்டாடுவதற்கான காரணம் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும் சிறந்த கேப்டன் என்பது தான். அதாவது தனது அணி வெற்றி பெற்றால் கடைசியில் போய் நிற்பார். அதுவே தோற்றுவிட்டால் முதல் ஆளாக வந்து கேப்டன் என்ற முறையில் தோல்வியை ஏற்றுக்கொள்வார்.

இப்படி தோனிக்கு நல்ல பெயர் இருந்த நிலையில் சினிமாவில் தயாரிப்பாளராக எல்ஜிஎம் படத்தின் மூலம் தனது முதல் அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

Also Read : தோனிக்கு நம்ம சினிமா கற்றுக் கொடுக்கும் பாடம்.. சிஎஸ்கேவை மனதில் வைத்து தல ஆடும் ஆட்டம்

இந்த சூழலில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் எல்ஜிஎம் படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். அதாவது பண்பாட்டை சீர்குலைக்கும் விதமாக இந்த படம் இருக்கிறது. அதாவது எங்கள் காலத்தில் நிச்சயத்திற்கு பிறகு தான் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் கை நனைப்பார்கள். இந்த படத்தில் என்னவென்றால் மாமியாருடன் பழகிப் பார்க்க வேண்டும் என்று நடிகை கண்டிஷன் போடுகிறார்.

இப்படி எல்லாம் போனா எவன் கல்யாணம் பண்ணிப்பான் என்று கண்டபடி பேசி உள்ளார் பயில்வான். மேலும் இது இப்போது உள்ள காலகட்டத்திற்கு சரி வருமா, இதில் யாரை குறை சொல்ல வேண்டும் என்றால் எல்ஜிஎம் படத்தின் கதையை தோனியின் மனைவி தான் எழுதியிருக்கிறார். இவர் எப்படி இது போன்ற கதையை எழுதினார் என்பதே யூகிக்க முடியவில்லை.

Also Read : மனைவியின் ஆசையே நிறைவேற்றும் தல தோனி.. தயாரிப்பாளராகவே ஜெயிக்கல, இதுல இது வேறயா!

மேலும் தோனி தன்னிடம் இருந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்காக தான் சினிமாவில் இவ்வாறு படம் தயாரித்திருக்கிறார். மக்கள் தயவுசெய்து யாரும் எல்ஜிஎம் படத்திற்கு போய் விடாதீர்கள். அப்படிப் போனால் தலைவலி மாத்திரை தான் சாப்பிட வேண்டும் அந்த நிலைமைக்கு தான் படம் இருக்கிறது.

இப்படத்தில் சொல்லிக் கொள்ளும்படி இருப்பது யோகி பாபுவின் காமெடிதான். பஸ் கண்டக்டராக சில காட்சிகளில் அவர் வந்தாலும் மக்களை சிரிக்க வைக்கிறார். மேலும் நதியா அதே அழகுடன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி படத்தில் எதுவும் இல்லை என கழுவி ஊற்றி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Also Read : LGM Movie Review- தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? எல்ஜிஎம் முழு விமர்சனம் இதோ!

Trending News