Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நண்பன், ஜிம் தோழன் என்று சொல்லியே பப்லுக்கு ஆப்பு வைத்த ரங்கநாதன்.. 2 பயில்வான்கள் மோதலின் பின்னணி

நண்பன், ஜிம் தோழன் என்று சொல்லியே பப்லுக்கு ஆப்பு வைத்த ரங்கநாதன்.. 2 பயில்வான்கள் மோதலின் பின்னணி

நடிகர்களின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி பொழப்பு நடத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது

Babloo And Bailwan Fight: நடிகர்களின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டி பொழப்பு நடத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பல நடிகர்கள் இவர் சொல்வது முற்றிலும் பொய், பணம் சம்பாதிப்பதற்காக இப்படி அவதூறாய் பேசி வருகிறார் என்றெல்லாம் இவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

அதிலிருந்து பயில்வான் ரங்கநாதன் வேறு ஒரு விதமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். அதாவது மற்றவர்கள் சொல்லியதாகவும், தனக்கு நெருங்கிய நண்பர் தான் அவர் என்றெல்லாம் பூசி மழுப்பி தனது வேலையை தொடர்ந்து வந்தார்.

இப்பொழுது அவர் வாய்க்கு மெல்லுவதற்கு சர்க்கரை பொங்கல் கிடைத்தது போல் அமைந்தது பப்லு மற்றும் சீத்தல் விவகாரத்து விஷயம். இதைப் பற்றி தான் அவர் தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். பப்லு எனது நெருங்கிய நண்பர் எனது ஜிம் தோழர் என்றெல்லாம் பேட்டி கொடுக்க ஆரம்பித்தவர் மெல்ல மெல்ல அவதூறுகளை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது பப்லு மற்றும் சீத்தல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதற்கு இதுதான் காரணம் என பல விஷயங்களை கூறியுள்ளார். இதற்கு பப்லு தரப்பிலிருந்து பதிலுக்கு அவரும் பயில்வான் ரங்கநாதனை சாடினார். இப்படி இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வசை பாடி வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் ஒரு படி மேலே சென்று சீத்தலை வலையில் சிக்க வைப்பதற்காக பப்லு லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் என்றும் அவருக்காக நட்சத்திர ஓட்டலில் ஒரு நாள் ஒரு லட்ச ரூபாய் வாடகை கொடுத்து இருவதும் தனிமையில் இருந்து வந்தனர் என்றும் கூறினார்.

அவர்கள் இருவரும் தேவையை நிறைவேற்றிக் கொண்டு இப்பொழுது பிரிந்து விட்டனர் இதுதான் உண்மை என்றெல்லாம் பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். 57 வயது ஆளுக்கும் 21 வயது பெண்ணுக்கும் எப்படி கல்யாண உறவு நன்றாக அமையும் என்று வசை பாடி வருகிறார் ரங்கநாதன்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.