சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஜெனியை வில்லியாக மாற்றும் பாக்கியா.. பெரிய கும்பிடு போட்டு தலை தெரித்து ஓடிய மகன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தெரிஞ்சோ தெரியாமலோ பாக்கியாக்கு ஒரு நல்லது பண்ணி இருக்கிறார். அதாவது ஈஸ்வரியை பாக்கியாவிடமிருந்து பிரித்து கூட்டி வந்து விட்டால் மொத்த குடும்பமும் வருத்தப்படுவார்கள் என்று கோபி நினைத்தார். அதன்படி அம்மாவிடம் செண்டிமெண்டாக பேசி ராதிகாவுடன் கிளம்பும்போது அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு போய் விட்டார்.

ஆனால் அங்கே போன பிறகு தான் ஒவ்வொரு நாளும் கோபிக்கு பெரிய மண்டடியாக விழுகிறது. அதாவது ராதிகா அம்மாவிற்கும் கோபி அம்மாவிற்கும் கொஞ்சம் கூட ஒத்து வர மாட்டுக்கு. அது மட்டுமில்லாமல் ஈஸ்வரி இங்கே வந்த பிறகு கெத்த காட்டணும் என்று ராதிகாவின் அம்மாவிடம் கொஞ்சம் ஓவராக நடந்து கொள்கிறார்.

அமிர்தாவை பார்த்து பொறாமைப்படும் ஜெனி

இதனால் ராதிகாவிற்கும் எப்பொழுது தான் இவர்கள் வீட்டை விட்டு போவார்கள் என்ற நினைப்பு வந்து விட்டது. இதனால் கோபியிடம் இன்னும் இரண்டு நாள் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது உங்க அம்மா இங்கிருந்து கிளம்பி ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் கோபி இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இரண்டு மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது போல் அவஸ்தைப்படுகிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா ஹோட்டல் நடத்தி வரும் பக்கத்தில் புதுசாக ஒரு பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. அதாவது குடும்பத்துடன் சாப்பிட வரும் ஈஸ்வரி ஹோட்டல் பக்கத்திலேயே பார் ஷாப் வைக்கப் போகிறார்கள்.

இதனால் பிசினஸில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பாக்கியா வருத்தப்பட ஆரம்பித்து விடுகிறார். இதற்கு இடையில் ஜெனி அமிர்தாவை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதாவது நாம் இந்த வீட்டில் பொறுப்பில்லாமல் இருப்பது போல் அமிர்தாவிற்கு மட்டும் அனைத்தும் தெரிந்த மாதிரி ஒவ்வொருவரும் நடந்து கொள்கிறார்கள் என்ற நினைப்பு வந்து விட்டது.

இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அமிர்தாவிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார். இப்படியே போனால் ஜெனி அமிர்தாவுக்கு வில்லியாக மாறிவிடுவார் போல. அடுத்தபடியாக இதுவரை பாக்யாவின் மகனாக நடித்து வந்த எழில் கேரக்டரில் நடித்த விஜே விஷாலுக்கு பதிலாக நடிகர் நவீன் கமிட் ஆகி இருக்கிறார். அந்த வகையில் இன்று வரப்போகிற எபிசோடில் நவீன் எழிலாக நுழைந்து விட்டார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால், புதிதாக ஜீ தமிழில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் இந்த நாடகத்திற்கு பெரிய கும்பிடு போட்டு தாவி விட்டார்.

Trending News