சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

பாக்கியாவுக்கும் கோபிக்கும் டும் டும் டும்.. மாமா வேலையை பார்க்கும் ஈஸ்வரி, சொம்பு தூக்கும் வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி துரோகம் பண்ணிட்டு ராதிகாவை கல்யாணம் பண்ணியதுமே பாக்கியா தனியாக வந்திருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்திருக்காது. ஈஸ்வரியும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார். கோபி வாழ்க்கையில் இருந்து ராதிகாவை சதி பண்ணி ஈஸ்வரி துரத்திவிட்டார்.

அந்த வகையில் தற்போது கோபிக்கு மறுபடியும் பாக்யாவை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ஈஸ்வரி முடிவு எடுத்து விட்டார். அதனால் கோபியை கூப்பிட்டு உனக்கும் பாக்கியாவுக்கும் நான் மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்கிறார். கோபி வேண்டாம் என்று மறுப்பு சொல்லவும் இல்லை, ஓகே என சம்மதமும் தெரிவிக்கவில்லை.

ஆனால் கோபி கண்ணில் பாக்கியவுடன் சேர்ந்து வாழ்ந்தாள் நன்றாக இருக்கும் என்று பீல் பண்ணுகிறார் என உணர்ந்த ஈஸ்வரி கோபி இடம் உனக்கு பாக்கியாவை கல்யாணம் பண்ண ஓகே தானே என்று கேட்ட நிலையில் கோபியும் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி புரிந்து கொண்டார்.

உடனே சூட்டோடு சூட்டாக இந்த விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய ஈஸ்வரி பாக்கியாவிடம் பேசுகிறார். அதே நேரத்தில் எப்படி பேசுவது பாக்கியா எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாத நிலையில் வாய்க்கு வந்தபடி உளறிவிட்டு அந்த இடத்தில் இருந்து ஈஸ்வரி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

பிறகு எழில் மற்றும் செழியனே கோயிலுக்கு வரவழைத்து பாக்யாவுக்கும் கோபிக்கும் நான் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டேன். அவர்கள் இருவருக்கும் ஒரு துணை வேண்டும், அதனால் நாம் அனைவரும் சேர்ந்து அவர்கள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொல்கிறார்.

இதைக் கேட்டதும் எழில் அதிர்ச்சியாகிய நிலையில் அதெல்லாம் முடியாது அப்பா செய்தது துரோகம். அதனால் மறுபடியும் அம்மாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பிடிவாதமாக சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி சொன்னதுமே செழியன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று சம்மதம் தெரிவிக்கிறார்.

பிறகு எழிலிடம் ஈஸ்வரி உங்க அம்மாக்கு இதில் ஓகே என்றால் நீ எந்த எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்று சொல்கிறார். பிறகு எழிலும் அவர்கள் இரண்டு பேருக்கும் ஓகே என்றால் எனக்கு ஓகே என்று சம்மதம் தெரிவித்த நிலையில் ஈஸ்வரி இது போதும் எனக்கு மற்ற விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று களத்தில் இறங்க தயாராகி விட்டார்.

அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் ஈஸ்வரி எமோஷனல் டிராமா போட்டு பாக்கியா கோபி கல்யாணத்தை நடத்தி வைத்து விடுவார் போல. இதுக்கு பேசாமல் கோபி விட்டுட்டு போன பிறகு பாக்கிய தனியாக இருந்து லட்சியத்தை சாதித்து சந்தோசமாக இருந்திருக்கலாம். ஈஸ்வரி தனியாக விடக்கூடாது என்று பாவப்பட்ட பாக்யாவின் நிலைமை தற்போது பரிதாபமாக போகப்போகிறது.

Trending News