திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கோபியின் மொத்த கொட்டத்தையும் அடக்கிய பாக்கியா.. நல்ல வச்சு செய்யும் மகன்கள்

Bhakkiyalaksmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியா நினைத்தபடி சுயமரியாதையுடன் கெத்தாக வாழ்ந்து, பல பெண்களின் வாழ்க்கைக்கு சிறந்த உதாரணம் என்பதை எடுத்துக்காட்டி விட்டார். பாக்கியா படிப்பறிவு இல்லாத முட்டாள், எந்த வேலைக்கும் தகுதியில்லை என்று வேலைக்காரியாக நடத்திய கோபிக்கு விழுந்த மரண அடி.

பெண்கள், வீட்டு வேலை மட்டும்தான் செய்யக்கூடியவர் என்று தவறாக புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு, பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்திய நாடகமாக பல குடும்பத்தில் உள்ளவர்கள் பூரித்து போய் பார்த்து வருகிறார்கள். இது நாடகம் தான் என்று தெரிந்தாலும் பாக்கியா ஜெயித்தது சந்தோஷமாக இருக்கிறது.

Also read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

மேலும் பாக்கியா நினைத்தபடி வீட்டை அவருடைய பெயரில் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். அதற்காக ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு பாக்கியா, எழில், மாமனார் மற்றும் கோபி அனைவரும் வருகிறார்கள். அதன் பின் விருப்பமே இல்லாமல் அப்பாவின் மிரட்டலுக்காக கோபி பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு விடுகிறார்.

ஆக மொத்தத்தில் வீட்டை பாக்கியா பெயரில் நல்லபடியாக மாத்தியாச்சு. அடுத்ததாக எழில், கோபி இடம் இனிமேல் உங்களுக்கும் அந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எக்காரணத்தைக் கொண்டும் அந்த வீட்டுப் பக்கம் வந்து விடாதீர்கள் என்று மூஞ்சில் அடித்தபடி தெளிவாக சொல்லிவிடுகிறார்.

Also read: அதட்டி உருட்டி அனுப்பி வைத்த குணசேகரன்.. கரிகாலனுக்கு டிமிக்கி கொடுத்த ஆதிரை

இதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்த வீட்டில் ஏற்கனவே எழில் பாக்கியலட்சுமி இல்லம் என்ற பெயர் வைத்து பலகையை மாற்றிய போது ஆத்திரப்பட்டு சண்டை போட்டு இந்த பிரச்சனைக்கே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் தான் கோபி. அதனால் மறுபடியும் எழில் அந்த வீட்டிற்கு பாக்கியலட்சுமி இல்லம் என்ற பெயர் பலகையை போட்டுவிட்டார்.

இதை பார்த்த கோபி டென்ஷன் ஆகிறார். ஆனாலும் இனிமேல் ஒன்னும் பண்ண முடியாது. கோபியின் மொத்த கொட்டத்தையும் பாக்கியா அடக்கி விட்டார். அதற்கேற்ற மாதிரி இவருடைய மகன்களும் கோபியை நல்ல வச்சு செய்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்து தான் கோபி முழு வில்லனாக மாறி பாக்கியாவை பழி வாங்க போகிறார். ஆனாலும் இவரால் ஒன்னும் பண்ண முடியாமல் கடைசியில் தோற்று தான் நிற்கப் போகிறார்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Trending News