திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

இனியாவை தண்ணி தெளித்துவிட்ட பாக்கியா குடும்பம்.. ஆகாஷை கண்டித்த செல்வி, ஓவராக துள்ளும் வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா காதலித்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தவுடன் எல்லோரும் செல்வியையும் ஆகாசையும் தான் தவறாக பேசுகிறார்கள். உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணிட்டாங்க, காசு பணத்திற்காக பையனை வைத்து இப்படி பண்றாங்க, தகுதி தராதரம் என்ன என்று செல்வி குடும்பத்தை மட்டம் தட்டும் அளவிற்கு ஈஸ்வரி கோபி செழியன் என அனைவரும் செல்வியை அவமானப்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் யாருமே இனியாவை கண்டிக்க மறந்து விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்ட செல்வி, வீட்டுக்கு போய் ஆகாஷை அடித்து புத்திமதி சொல்லும் அளவிற்கு கண்டிக்கிறார். அத்துடன் நமக்கு சோறு போட்ட வீட்டிற்கு இப்படி சங்கடத்தை உண்டாக்கி விட்டாயே? பாக்கியா அக்கா உன் படிப்புக்காக எவ்வளவோ உதவி பண்ணி இருக்காங்க.

அவங்க உதவி பண்ணியதால் தான் நீ இந்த அளவுக்கு படிக்க முடிந்தது, அதெல்லாம் மனசுல வைத்திருந்து ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணினாய் என்று அடித்து திட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார். இப்படிப்பட்ட செல்வியை தவறாக புரிந்து கொண்ட பாக்கிய குடும்பம் இனியாவிடம் இனி உனக்கு போன் கிடையாது. அந்த ஆகாசையும் பார்த்து பேச கூடாது என்று கோபி கண்டிஷன் போட்டு விட்டார்.

கோபியை விட செழியன், இனியா காதலித்ததை விட செல்வி மகனே காதலித்தது தவறு என்று சொல்வதற்கு ஏற்ப ஒரு பேச்சுக்காகவும் மரியாதைக்காகவும் தான் அவர்களை அக்கா என்று கூப்பிட்டோம். அதற்காக அவர் பையன் கூட பேசி பழக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று இனியாவிடம் கோபமாக சண்டை போடுகிறார்.

ஆனால் எழில் மட்டும் இந்த விஷயத்தை பொறுமையாக டீல் பண்ணும் விதமாக இனியாவிற்கு சப்போர்ட் பண்ணுகிறார். அதாவது எழில் பொறுத்தவரை காதலித்ததும் தப்பு இல்லை, செல்வி மகன் மீது காதல் வந்ததும் தப்பு இல்லை. ஆனால் படிக்க வேண்டிய காலத்தில் இப்பொழுது காதலித்து தான் தப்பு என்று இனியாவிற்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார்.

உடனே இனியாவும் பாக்யாவிடம் பேசி சமாதானப்படுத்த பார்க்கிறார். பாக்கியாவும் உன்னை எப்பொழுதெல்லாம் நம்பி அனுப்புகிறேனோ அப்பொழுதெல்லாம் எனக்கு சங்கடத்தை தான் நீ உண்டாக்குகிறாய். உன்னை நம்பி தானே நீ சொன்ன இடத்துக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். ஆனால் நீ அவனை ஹோட்டலுக்கு ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லி பேசி இருக்கிறாய். அப்பொழுது கூட நான் செல்வியிடம் நம்ம பிள்ளைகளை நாம் தான் நம்பனும் என்று சொன்னேன்.

ஆனால் நீ எனக்கே தெரியாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து என்னை அசிங்கப்படுத்தி விட்டாய் என்று திட்டுகிறார். அந்த வகையில் பாக்கிய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து இனிய செய்த தவறை மறந்து விட்டு செல்வி குடும்பத்தை மொத்தமாக குற்றம் சொல்லிவிட்டார்கள். நம்ம வீட்டு பிள்ளை என்ன தப்பு பண்ணினாலும் பரவாயில்லை என்பதற்கு ஏற்ப இனியாவை கண்டிக்காமல் தண்ணி தெளித்து விட்டார்கள்.

Trending News