புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தொல்லை கொடுக்கும் இனியாவால் சிக்கலில் தவிக்கப் போகும் பாக்கியா குடும்பம்.. செண்டிமெண்டில் தடுமாறும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா மற்றும் கோபிக்கு நடக்கும் சமையல் நிகழ்ச்சியில் என்ன தான் கோபி ஒரு மார்க் வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி காட்டினாலும் கடைசி போட்டியில் பாக்யா ஜெயித்து விட்டார். இதற்கு இடையில் இனியாவை பற்றி கவலைப்படும் பாக்கியா, மகளுக்கு அடிக்கடி போன் பண்ணி பார்க்கிறார்.

ஆனால் இனியா போன் எடுக்கவில்லை என்றதும் பாக்யா பதட்டத்தில் செழியனுக்கு போன் பண்ணி என்னாச்சு இனியா வந்து விட்டாளா என்று கேட்கிறார். அதற்கு செழியன் இல்லை இனிமேல் தான் இனியாவை கூப்பிட போகிறேன் என்று சொல்கிறார். உடனே கோபப்பட்ட பாக்கியா சீக்கிரம் போய் இனியாவை கூப்பிட்டு எனக்கு போன் பண்ணு என்று சொல்கிறார்.

போலீஸிடம் மாட்டிக் கொண்ட இனியா

அந்த வகையில் செழியன் இனியாவை ட்ராப் பண்ண வீட்டில் போய் பார்க்கிறார். ஆனால் அங்கு இனியா இல்லை என்று தெரிந்ததும் செழியனுக்கும் பயம் வந்து விட்டது. இதனை தொடர்ந்து கோபி கூட்டிட்டு வந்த செஃப் கடைசி நிமிடத்தில் செய்த பொருள்களை சொதப்பியதால் பாக்கியா முன்னாடி தோற்றுப் போய்விட்டார். கடைசியில் ஈஸ்வரி ஆசைப்பட்ட மாதிரி பாக்கியா ஜெயித்து விட்டார்.

ஆனால் இனியாவை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று மறுபடியும் செழியனுக்கு போன் பண்ணி பார்க்கிறார். செழியன் நான் இனியாவை விட்ட இடத்திற்கு தான் வந்து பார்த்தேன். ஆனால் அங்கு யாருமே இல்லை ஒருவேளை இனியா வீட்டிற்கு போய் இருப்பாள் என்று சொல்கிறார். உடனே பதட்டமான பாக்யா வீட்டிற்கு போனதும் எனக்கு போன் பண்ணி தகவலை சொல்லு என்று சொல்கிறார்.

ஆனால் இனியா போன இடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீஸ் அங்கே வந்து அனைவரையும் கூட்டிட்டு போகிறார்கள். இதனால் மறுபடியும் பாக்கியா குடும்பத்திற்கு அவமானமாக இனியா தொல்லை கொடுக்கும் விதமாக அமையப் போகிறது.

மேலும் கோபிக்கும் இந்த ஒரு விஷயம் தர்ம சங்கடமாக அமையப் போகிறது. ஏனென்றால் இனியா மீது அவரும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். அந்த வகையில் இனி சென்டிமென்ட் காட்சிகளுடன் தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனைகளையும் சந்திக்க போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News