புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எழில் கண்ட கனவை தூள்தூளாக உடைக்க போகும் பாக்கியா.. ராதிகாவை அலட்சியப்படுத்தி மாமியார் பேச்சை கேட்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கொடுக்க வேண்டிய கடனை எப்படி அடைக்க வேண்டும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கையில் இருக்கும் பணத்தையும் நகை மற்றும் இனியாவிற்காக வாங்கிய நகையை அனைத்தையும் அடகு வைத்து அதன் மூலம் பணத்தை ஏற்பாடு பண்ணலாம் என்று முடிவெடுக்கிறார்.

ஆனாலும் மீதம் தேவைப்படும் பணத்தை எப்படி ரெடி பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவுடன் சேர்ந்து ஹோட்டலில் வேலை பார்த்த ஆட்கள் அனைவரும் வந்து பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஹோட்டல் மீது அனைவருக்கும் கெட்ட எண்ணம் வந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து எப்படி ஹோட்டல் நடத்த முடியும், மறுபடியும் நாங்கள் இதில் வேலை பார்த்தால் எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று தொந்தரவு பண்ணும் விதமாக பாக்யாவிடம் ஒட்டுமொத்தமாக கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள். ஆனால் பாக்யா எதற்கும் அசராமல் என் மீது நம்பிக்கை வையுங்கள் நிச்சயம் நான் இந்த பிரச்சனையை முடித்து விடுவேன்.

எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கும் என் மீது நம்பிக்கை இருந்தால் அமைதியாக வீட்டுக்கு போங்கள். ஹோட்டலின் அவமானத்தையும், பிரச்சனையும் நான் சமாளித்து கூடிய விரைவில் ஹோட்டலை திறப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆனால் எழில், பாக்யா பிரச்சனையை சமாளிக்க முடியாமல் ஜெயிலுக்கு போகிறது போல் கனவு கண்டு விட்டார்.

இதனால் பயந்து போன எழில் அம்மாவை நினைத்து ரொம்பவே வருத்தத்துடன் அமிர்தாவிடம் பேசுகிறார். ஆனால் பாக்யாவிற்கு இருக்கும் நம்பிக்கையை பார்க்கும் பொழுது எழில் கண்ட கெட்ட கனவை தூள் தூளாக உடைக்கும் அளவிற்கு ஒரு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். இதையெல்லாம் தொடர்ந்து கோபி, பாக்கியாவின் இக்கட்டான சூழ்நிலையை நினைத்து பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

அத்துடன் ராதிகாவிடம் பணத்தை கொடுக்க முடியாமல் பாக்யா ஜெயிலுக்கு போகும் சூழ்நிலை ஏற்படப் போகிறது என்று சந்தோஷத்துடன் சொல்கிறார். ஆனால் ராதிகா நீங்கள் ஏதாவது இதில் தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். நான் எதுவும் பண்ணவில்லை ஆனால் நிச்சயம் பாக்கியா அவமானப்பட்டு நிற்கப் போகிறார் இதற்கு மேலேயும் சங்கடத்தை அனுபவிக்க போகிறார் என்று வன்மத்துடன் சொல்கிறார்.

அதே மாதிரி கூடவே இருந்து கோபியை இன்னும் தூண்டி விடும் விதமாக ராதிகாவின் அம்மா, ஈஸ்வரி செய்த காரியத்தையும் பாக்யா மாமனாருக்கு செஞ்ச சடங்குகளையும் சொல்லி கோபியை இன்னும் கோபப்பட வைக்கிறார். அந்த வகையில் மாமியார் சொன்னவுடன் கோபியும், பாக்கியா இதுவரை பட்டது போதாது இனி மேலும் டார்ச்சர் அனுபவிக்கணும் என்று கோபி வன்மத்துடன் அலைகிறார்.

Trending News