புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோபி மூஞ்சில் கரியை பூச போகும் பாக்கியா.. ஆனந்தை பற்றி உண்மையை சொல்லப் போகும் பழனிசாமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தனக்கு என்னதான் இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் யாரையும் நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக சொந்தக்காலில் நின்னு ஜெய்ப்பதற்கு அவருக்கு தெரிந்த சமையல் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஹோட்டலை நடத்தும் அளவிற்கு வெற்றியை பார்த்தார். ஆனால் இதையெல்லாம் பார்த்த கோபியால் பாக்யாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால் ஒட்டுமொத்த கோபத்தையும் மனதில் வைத்துக் கொண்டிருந்த கோபிக்கு அப்பாவின் இறுதி சடங்கையும் செய்ய முடியாமல் போனதற்கு பாக்கிய தான் காரணம் என்று பழிவாங்க நினைத்து விட்டார். அந்த வகையில் பாக்யாவின் ஹோட்டலில் ஆனந்தை அனுப்பி சாப்பாட்டில் கலப்படத்தை பண்ணி அதை பொதுமக்கள் சாப்பிட்டு உடல் ரீதியாக தொந்தரவு வரும் அளவிற்கு ஒரு பிளான் போட்டார்.

அந்த பிளான் படி பாக்யாவும் சிக்கி தற்போது அதை சரி செய்ய போராடி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக பணத்தை கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அந்த பணம் பத்து லட்சத்துக்கு மேல் இருப்பதால் அதை எப்படி ரெடி பண்ண என்று யோசித்துக் கொண்டு தன்னிடம் இருந்த பணத்தையும் நகையும் அடகு வைத்து ஏற்பாடு பண்ணலாம் என முடிவெடுத்துவிட்டார்.

அப்பொழுது ஈஸ்வரியும் தாத்தா கட்டின தாலியை பாக்யாவிடம் கொடுத்து இதை வைத்தும் நீ பணத்தை ஏற்பாடு பண்ணிக்கோ என்று சொல்கிறார். ஆனால் பாக்கியா அவருடைய தாலியை காட்டி இதை நான் அடகு வைத்தால் கூட எந்தவித தப்பும் இல்லை. ஆனால் உங்களுக்கு மாமா கட்டின தாலி எந்த அளவுக்கு முக்கியம். அவர் சொன்ன வாக்குகள் அனைத்தையும் ஒன்று விடாமல் உங்களுக்காக நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்.

அதனால் அந்த தாலியை நீங்கள் எப்பொழுதுமே பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி ஹோட்டலுக்கு கிளம்பி விடுகிறார். அப்படி எழிலுடன் ஹோட்டலுக்கு பாக்கியா போகும் பொழுது அங்கே பொதுமக்கள் அனைவரும் நின்று பாக்கியவுடன் பணத்தைக் கேட்டு பிரச்சினை பண்ணுகிறார்கள். பாக்யா பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அக்கவுண்டில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இன்னும் கூடிய சீக்கிரத்தில் எல்லாத்துக்கும் பணம் வந்து சேர்ந்துவிடும் என்று பொறுமையாக எடுத்து சொல்கிறார். ஆனால் இது எதையும் கேட்காத பொதுமக்கள் அங்கே கடை முன்னாடி நின்று பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிறகு அங்கே போலீஸ் வந்ததும் பாக்கியாவிடும் சீக்கிரம் சொன்னபடி பணத்தை கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் உங்களை நான் அரெஸ்ட் பண்ண வேண்டியது வரும் என்று சொல்கிறார்.

உடனே அங்கு நின்று கொண்டிருந்த பாக்யா, யாருக்கு போன் பண்ணுகிறார். அந்த வகையில் பழனிச்சாமி இடம் உதவி கேட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் ஆனந்த் மீது தான் சந்தேகம் இருக்கிறது என்பதால் பழனிச்சாமி, ஆனந்த் பற்றி விசாரித்து நடந்த எல்லா பிரச்சனைக்கும் பின்னாடி கோபி இருக்கிறார் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வந்து விடுவார்.

அதன் மூலம் ஹோட்டலுக்கு வந்த கெட்ட பெயர் எல்லாம் நீக்கி, மக்களிடம் வாக்கு கொடுத்தபடி பணத்தையும் செட்டில்மெண்ட் பண்ணி பழையபடி கெத்தாக பாக்யா ஹோட்டலை நடத்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்க்காத கோபிக்கு இதில் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகிறது.

Trending News