புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாக்கியா.. மோப்பம் பிடித்த கோபி, உச்சகட்ட கோபத்தில் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் என்பதாவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக பண்ண வேண்டும் என்று பாக்கியா மற்றும் செழியன் சேர்ந்து ஏற்பாடுகளை பண்ணி விட்டார்கள். அந்த வகையில் பாக்கியா ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் இவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் கோபி குழப்பம் அடைகிறார்.

இவர்கள் எங்கே போகிறார்கள் என்று கேட்கும் விதமாக செழியனுக்கு கோபி போன் பண்ணுகிறார். ஆனால் செழியன் போன் எடுக்காத போது என்னுடைய லட்டு குழந்தை இனியா போன் எடுத்து பேசுவாள் என்று இனியாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். ஆனால் இனியாவும், கோபி தான் போன் பண்ணுகிறார் என்று பார்த்தும் அதை எடுக்காமல் அலட்சியப்படுத்தி விடுகிறார்.

எழிலுக்காக காத்திருக்கும் குடும்பம்

இதை பார்த்து யாருமே நம்மளை கண்டுக்க மாட்டாங்க, கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க என்று புலம்பிக் கொண்டு ராதிகாவிடம் ஒரு காபி கேட்டு வீட்டில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக கோவிலுக்கு போன அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஏனென்றால் ஈஸ்வரி மற்றும் தாத்தா எதிர்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செழியன் செய்து வைத்திருக்கிறார்.

பிறகு அங்கு இருப்பவர்கள் அனைவரும் எழில் வருவார் என்று வாசலிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பங்க்ஷனில் கலந்து கொள்ள வந்த அனைவரும் கோபி மற்றும் எழிலை பற்றி விசாரித்து பாக்கியாவை நோகடிக்கிறார்கள். இருந்தாலும் பாக்யா நிச்சயம் எழில் வருவார் என்ற நம்பிக்கையில் வாசலிலே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் அமிர்தா, கடைக்கு போய் தாத்தாவுக்காக ஒரு வாட்ச வாங்கிட்டு வருகிறார். வந்ததும் எழில் எங்கே போனாய் என்று கேட்டதும், வாட்சை கொடுத்து நீங்கள் தாத்தாவின் பங்க்ஷனுக்கு போயிட்டு வர வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் எழில் கோபப்பட்டு நான் போகப்போவதில்லை, இந்த வாட்ச் தேவை இல்லாமல் இருக்க வேண்டா. அதனால் திருப்பி கொடுத்துவிடலாம் என்று சொல்கிறார்.

ஆனால் எழிலை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கணும் விதமாக அமிர்தா எழிலை பங்க்ஷனுக்கு அனுப்பி வைக்க முயற்சி பண்ணுகிறார். ஆனால் கடைசியில் எழில், தாத்தாவிற்காக போகலாம் என்று முடிவு பண்ணிய நிலையில் நம் அனைவரும் சேர்ந்து போகலாம் என்று அமிர்தாவை கூட்டிட்டு போகப் போகிறார். இது எதுவும் தெரியாத பாக்யா , எழில் வருவார் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இதை தான் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள் என்ற ஒரு சொலவடை உண்டு. அது போல் தான் ஒரு பக்கம் எழிலை வீட்டை விட்டு அனுப்பி விட்டு, இன்னொரு பக்கம் பாசத்துக்காக அவன் வருவான் என்று ஏக்கத்தில் இருக்கிறார். இதனை அடுத்து கோபிக்கும் இந்த பங்க்ஷன் தெரிந்த நிலையில் ராதிகாவை விட்டுவிட்டு அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்கு வந்து விட்டார்.

அந்த வகையில் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து நடத்தும் பொழுது போட்டோக்கள் அனைத்தும் எடுக்கப்படுகிறது. இது எப்படியோ ஒரு ராதிகா பார்க்க, என்னைத் தவிர உன் குடும்பத்தில் எல்லோர் கூடையும் சந்தோஷமாக சேர்ந்து விட்டிங்க. நான்தான் உங்க குடும்பத்தில் ஒருவர் கிடையாது என்பதை அவ்வப்போது நிரூபித்து விட்டீர்கள் என்று கோபியிடம் உச்சகட்ட கோபத்தை காட்டப் போகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News