Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் பிறந்தநாளுக்கு ஒவ்வொருவரும் கிப்ட்டுகளை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்த பாக்யாவுக்கு ஈஸ்வரி ஒரு அதிர்ச்சியை கொடுத்து விட்டார். அதாவது பாக்யாவின் பிறந்தநாளுக்கு வந்து இருப்பவர்கள் அனைவரும் முன்னாடியும் பாக்யாவும் கோபியும் சேர போகிறார்கள்.
சீக்கிரத்திலேயே இவர்களுடைய கல்யாணம் நடக்கும் அதற்கும் நீங்கள் அனைவரும் வந்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி உளர ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் கேட்டம் கோபி அமைதியாக நின்ற நிலையில் பாக்கியா, ஈஸ்வரியின் ஆசைக்கு பதிலடி கொடுத்து விட்டார். அதாவது என் மாமியாரின் ஆசையை இப்பொழுது வெளிப்படுத்தியதில் எனக்கு சந்தோசம் தான்.
ஆனால் அதில் எனக்கு துளி கூட விருப்பமில்லை, அந்த வகையில் இப்பொழுதாவது அவங்கள் மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்டினது எனக்கு சந்தோசம் தான். இதற்கு இப்பொழுது முடிவு கட்டும் விதமாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எனக்கும் கல்யாணம் வாழ்க்கைக்கும் ஒத்து வராது. இனி என்னுடைய லட்சியம் எல்லாம் பிசினஸில் அடுத்தடுத்து வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
அதனால் அதை மட்டும் தான் நான் கவனத்தில் வைத்து செயல்படுவேன் என்று சொல்லி ஈஸ்வரியின் ஆசையில் மண்ணள்ளி போட்டார். இதை எல்லாம் கேட்டு கோபப்பட்ட ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பிய நிலையில் பின்னாடியே கோபியும் கிளம்பி வீட்டிற்கு போய்விட்டார். அப்பொழுது ராதிகா, பாக்கியாவை பார்த்து உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லையா என்று கேட்கிறார்.
உடனே பாக்கியம் இதையே நான் திருப்பி கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்ட பொழுது எனக்கு சுத்தமாக அந்த மாதிரி ஒரு எண்ணமே இல்லை என்று ராதிகா சொல்கிறார். அப்பொழுது பாக்யாவும் நானும் அதே நிலைமையில் தான் இருக்கிறேன் என்று சொல்லி என் மாமியாருக்கு இப்பொழுதாவது புரிய வைத்து விட்டேன் என்று பதில் கூறுகிறார். வீட்டுக்கு வந்த கோபி, ஈஸ்வரிடம் பாக்கியாவுக்கு இஷ்டமில்லை என்றால் இனியும் இதைப் பற்றி பேசி கஷ்டப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்.
அடுத்து பாக்கியாவுக்கு கொடுத்த கிப்ட் அதே இடத்தில் இருப்பதை பார்த்து கோபி நான் கொடுத்த கிப்ட் கூட நீ பார்க்க விருப்பம் இல்லை என புரிந்து கொண்டேன் என சொல்லி புலம்புகிறார். கடைசியில் கோபி பாக்கியாவிடமும் ராதிகாவிடமும் அசிங்கப்பட்டு நிற்கிறார். இதனை தொடர்ந்து பாக்கியாவின் ஹோட்டல் வாசல் முன்னாடி ஆகாஷ் இனியா இருவரும் தனியாக சந்தித்து பேசி கொள்கிறார்கள்.
அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே செல்வி வந்து விடுகிறார். உடனே இனிய சமாளித்து ஹோட்டலுக்குள் போய்விடுகிறார். ஆனால் பதட்டமான ஆகாஷை பார்த்த செல்விக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. உடனே ஆகாஷிடம் உன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்த இந்த குடும்பத்திற்கு நீ ஏதும் கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்திடாதே.
இந்த குடும்பம் இல்லை என்றால் நீ இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது ஞாபகம் வச்சுக்கோ என்று கண்டிக்கிறார். ஆனாலும் இவர்களுடைய காதல் பாக்யாவுக்கு தெரிய வந்தால் நிச்சயம் எந்த பிரச்சினையும் பண்ணாமல் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்.