Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த காரியத்துக்கு பாக்யா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் அட்வைஸ் கொடுத்து திட்டி தீர்த்து விட்டார்கள். அடுத்து இனியா எந்த தவறும் பண்ண மாட்டேன். இனி கவனமாக இருக்கிறேன் என்று ஈஸ்வரிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். உடனே ஈஸ்வரியும், இனியாவை மன்னித்து இனி எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்துகிறார்.
அந்த நேரத்தில் கோபி, பாக்யா வீட்டிற்குள் நுழைகிறார். நுழைந்ததும் இனியாவை பார்த்தது என்னாச்சு, நீ ஏன் தேவையில்லாம அங்க போனாய் என்று கேட்கிறார். அதற்கு இனியா எனக்கு எதுவும் தெரியாது, என் பிரண்ட்ஸ் தான் என்னை கூட்டிட்டு போய் விட்டார்கள் என்று கூறுகிறார். உடனே பார்த்து கவனமாக இருந்து கொள், இல்லை என்றால் இந்த பிரச்சினை பேப்பர் நியூஸ் என்று எல்லா பக்கமும் வந்திருந்தால் உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.
ராதிகாவிடம் வேண்டாம் என சொல்லிய மயூ
அதனால் இனி ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப கவனம் தேவை என்று அப்பா என்கிற முறையில் கோபி அட்வைஸ் கொடுக்கிறார். இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது தாத்தா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அப்பொழுது கோபி நான் போகிறேன். ஆனால் போகிறதுக்கு முன்னாடி பாக்யாவிடம் கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கிறது என்று சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் பாக்யாவை பார்த்து இதுதான் நீ பிள்ளை வளர்க்கிற லட்சணமா? உன்னை நம்பி என் அம்மா அப்பா என் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீ அவர்களை பார்க்காமல் ஏதோ லட்ச லட்சமா சம்பாதிக்கிற நினைப்பில் ஹோட்டல் வெளியே என்று அலைந்து கொண்டிருக்கிறாய். உன்னால தான் என் பிள்ளைக்கு இவ்வளவு தூரம் பிரச்சனை என்று பாக்கியவை திட்டுகிறார்.
இதுவரை வாயை மூடி கொண்டிருந்த பாக்யா பொறுத்தது போதும் என்று பொங்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இதெல்லாம் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. என் பிள்ளையும் என்னுடைய குடும்பத்தையும் எப்படி பார்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இப்போதுதான் உங்களுக்கு இவர்கள் மீது அக்கறை வருகிறதா? இவர்களெல்லாம் வேண்டாம் என்று தானே போனீங்க இப்ப என்ன புதுசா உறவு கொண்டாடி வருகிறீர்கள்.
என் குடும்பத்தை பார்த்துக்க எனக்கு தெரியும். எங்க குடும்ப விஷயத்துல நீங்க தலையிட யாரு. உங்க வேலைய மட்டும் பாத்துட்டு போங்க என்று கோபியை சரமாரியாக கேள்வி கேட்டு வெளுத்து வாங்கி விட்டார். ஆனாலும் திருந்தாத கோபி, இனியும் உன்னை நம்பி என் மகளை இங்கே விட்டுட்டு போக மாட்டேன். இனியாவை எப்படி பார்த்துக்கணும் என்று எனக்கு தெரியும். அதனால் அவளை என்னுடன் கூட்டிட்டு போகிறேன் வா இனியா என்று கோபி கூப்பிடுகிறார்.
அப்பொழுது இனியா முடியாது என்று சொல்லிய நிலையில் கோபி அவமானப்பட்டு திரும்பி போகிறார். இதற்கிடையில் இனியாவை காப்பாற்றியது ராதிகா தான் என்று கோபிக்கு தெரிந்த நிலையில் ராதிகாவிற்கு நன்றி சொல்கிறார். ஆனால் ராதிகா, உங்க இஷ்டத்துக்கு வேணும்னா பேசுவீங்க இல்லன்னா பேச மாட்டீங்க அப்படித்தானே. உங்க அம்மா விஷயத்துல நான் பண்ணுனது தப்புதான் என்று தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டேன்.
ஆனால் நீங்கள் ரொம்ப ஓவராக பண்ணி என்னை கண்டுக்காமல் உதாசீனப்படுத்தினீர்கள். இப்பொழுது உங்க பொண்ணை நான் காப்பாற்றினேன் என்று தெரிந்ததும் நன்றி சொல்லி பேச வருகிறீர்கள். எப்போதுமே சுயநலமாக யோசித்து உங்க குடும்பத்தை மட்டுமே மனசுல வச்சு என்னிடம் நடந்து கொள்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம், என் என்னுடைய வாழ்க்கையில் தேவையில்லாமல் வந்து என்னை கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று ராதிகா கேட்கிறார்.
இப்படியெல்லாம் ராதிகா, கோபியிடம் பேசிய நிலையில் மயூ பயந்து போய் நிற்கிறார். அந்த சமயத்தில் ராதிகா, மயூவை உள்ள போக சொல்கிறார். ஆனால் மயு போகாமல் பயந்து போய் நின்ன நிலையில் ராதிகாவிடம் சண்டை போடாதீங்கம்மா என்று கெஞ்சுகிறார். அதன்படி ராதிகா நான் சண்டே எல்லாம் போடவில்லை. சும்மா அப்பாவிடம் பேச தான் செய்கிறேன். நீ பயப்படாமல் உள்ளே போ என்று சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- இனியா செய்த காரியத்துக்கு சப்போர்ட் பண்ணும் கோபி
- ஈஸ்வரி நிலைமையை யோசித்து கோபிக்கு நோ சொல்லிய இனியா
- தொல்லை கொடுக்கும் இனியாவால் சிக்கலில் தவிக்கப் போகும் பாக்கியா குடும்பம்