வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமனாருக்கு 80வது பிறந்தநாளை நடத்தி வைத்த பாக்கியா.. இறுதி தருணங்களுடன் ஈஸ்வரியை விட்டு போன கோபி அப்பா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கதை மட்டமாக இருந்தாலும் ஏதோ பார்த்த பழக்க தோசத்திற்காக தற்போது வரை இந்த சீரியல் ஓடிக் கொண்டு வருகிறது. கணவன் கைவிட்டாலும் அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தி சொந்தக்காலில் ஜெயித்துக் கொண்டு வருகிறார் பாக்யா. அதிலும் மாமனார் மாமியாருக்கு தேவையான ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து அவர்களை சந்தோஷ படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பாக்யாவின் மாமனாருக்கு எண்பதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக முடித்து வைத்தார். இந்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு திரும்பிய அனைவரும் ஒற்றுமையாக இருந்து பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இனிவரும் கதைகளில் அதிக சோகத்துடனும் சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கப் போகிறது. அதாவது அனைய போற விளக்கு பிரகாசமாக எரியும் என்று ஒரு சொலவடை உண்டு.

ராமமூர்த்தி அத்தியாயத்தை முடித்துவிட்ட இயக்குனர்

அதுபோல பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி, எழில் மற்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அட்வைஸ் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். அத்துடன் பாக்யா செய்த காரியத்திற்கு நல்லபடியாக வாழ்த்துக்களை சொல்லி நீ எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை அனைவரும் சேர்ந்து எடுத்து தருணத்தில் பாக்கியாவின் மாமனார் இறுதி தருணங்கள் நெருங்கி விட்டது.

சந்தோஷமாக அனைவரிடமும் பேசிய ராமமூர்த்தி பாக்யாவை பார்த்து நீ ரொம்ப நல்ல பொண்ணு, மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை வாழாமல் விட்டு விடாதே என்று சொல்லி மனசு ரொம்ப நிறைவாக இருப்பதால் என்னையே அறியாமல் என்னெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பாக்யாவை பார்த்து டாட்டா காட்டிவிட்டு தூங்கப் போகிறார்.

தூங்கிக் கொண்டிருக்கும் ராமமூர்த்தியை, ஈஸ்வரி வந்து எழுப்புகிறார். ஆனால் எந்தவித பேச்சு மூச்சும் இல்லாமல் இருக்கும் கணவரை பார்த்து ஈஸ்வரி பயத்துடன் கத்துகிறார். உடனே அனைவரும் வந்து ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கிறார்கள். பாக்கியா அழுது கொண்டு மாமா என்று கூப்பிடுகிறார். செழியனும் தாத்தாவை எழுப்பி பார்க்கிறார். ஆனால் ராமமூர்த்தியின் அத்தியாயங்கள் முடிந்து போனதால் அவர் பாக்யா குடும்பத்தை விட்டு போய்விட்டார்.

இப்படி மீளாத துயரத்தில் குடும்பத்தை விட்டுப் போன ராமமூர்த்தியின் இறப்பு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் கொடுக்கிறது. எல்லோரும் தலையில் அடித்து புலம்பிய நிலையில் ராமமூர்த்தி பார்த்து அழுகிறார்கள்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட எழில் மற்றும் கோபி, பாக்யா வீட்டிற்கு வரப் போகிறார்கள். ஆனால் வழக்கம் போல் ஈஸ்வரி, கோபி மீது கோபமாக இருப்பதால் அடுத்து நடக்க இருக்கும் சம்ப்ராதங்கள் அனைத்தையும் பேரன்களை வைத்து பண்ண போகிறார். இதனால் தொடர்ந்து இனிவரும் எபிசோடுகள் வெறும் அழுகாட்சி காட்சியாக இருக்கப் போகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News