சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

குள்ளநரி கூட்டத்திற்குள் மாட்டப்போகும் பாக்கியா.. பிள்ளைகளுக்கு மிகப்பெரிய வேதனை கொடுக்கும் கோபி அங்கிள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா தோழிகளுடன் சேர்ந்து பப்பில் மாட்டிய விஷயம் பாக்கியா குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி கொடுத்தது. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த இனியா, தற்போது இந்த அவப்பெயரை சரி செய்யும் விதமாக அனைவரிடமும் பாராட்டை பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு தான் காலேஜில் நடக்கும் டான்ஸ் போட்டி.

இதில் கலந்துகொண்டு ஜெயித்து விட்டால் அனைவரும் பாராட்டி நம்மளுடைய வீட்டிற்கும் பெருமை சேர்க்கலாம் என்று நம்புகிறார். ஆனால் இதை வீட்டில் இருப்பவர்களிடம் யார்கிட்டயாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எழிலுக்கு போன் பண்ணி காலேஜுக்கு வர சொல்கிறார். எழில், காலேஜுக்கு வந்ததும் என்ன விஷயம் சும்மா போன் பண்ணி வர சொல்ல மாட்ட என்ன என்று கேட்கிறார்.

பாக்யாவை பழிவாங்க வெறித்தனமாக இறங்கிய கோபி

அதற்கு ஒன்றும் இல்லை உன்னை பார்க்கணும் தோணுச்சு அதனாலதான் என்று சொல்லிய நிலையில் இன்னொரு விஷயமும் உன்னிடம் பேச வேண்டும் என்று இனியயா காலேஜில் நடக்க போகும் டான்ஸ் போட்டியை பற்றி சொல்கிறார். இதைக்கேட்ட எழில் நல்ல விஷயம் தான், உனக்கு ஆர்வம் இருக்கு என்றால் நீ சேர்ந்து விடு என்று பாசிட்டிவாக சொல்லுகின்றார்.

உடனே இனியா இப்பொழுது யாருக்கும் தெரிய வேண்டாம், சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் நான் ஜெயித்த பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தமாக அமைய வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறுகிறார். அதற்கு எழிலும் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி பாட்டி, இனியாவை கூட்டிட்டு போக வந்து விடுகிறார்.

அப்பொழுது அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தாத்தாவின் நினைவுகளை பற்றி பேசி மறுபடியும் சென்டிமென்ட் காட்சிக்கு போய்விட்டார்கள். வீட்டுக்கு வந்த ஈஸ்வரி மறுபடியும் கணவர் இல்லாத தருணத்தை மிக தனிமையாக உணர்வது போல் பீல் பண்ணி பாக்யாவிடம் பேசுகிறார். அதற்கு பாக்கியா நீங்கள் தனியாக இருந்தால் இப்படித்தான் யோசிப்பீர்கள்.

அதனால் தான் நான் உங்களுடைய இருப்பதற்கு ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அதாவது ஹோட்டலை நல்லபடியாக பார்ப்பதற்கு ஒரு செப்பை தேர்ந்தெடுத்து போடப் போகிறேன். அவர் எல்லா வேலையும் பார்த்து விடுவார் நான் அவருக்கு சில ஐடியா மட்டும் கொடுத்தா போதும் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி எனக்காக நீ எதுவும் பண்ண வேண்டாம் என்று சொல்லி நிலையில் செல்வி, பாக்யா அக்காவுக்கு கொஞ்சம் கூட நேரமே இல்லை அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்.

இந்த விஷயங்களை கேள்விப்பட்ட கோபி தற்போது நரி தந்திரத்தை யூஸ் பண்ணுகிறார். அதாவது இவருடைய ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு நபரை பாக்கியா ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப் போகிறார். அவர் அங்க போய் பல தில்லாலங்கடி வேலையை பார்த்து பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுத்து அந்த ஹோட்டலையே இல்லாமல் இழுத்து மூடுவதற்கு சூழ்ச்சி பண்ணப் போகிறார்.

அதன்படி கோபி வேலை பார்க்கும் ஹோட்டலில் இருந்து ஒருவர் பாக்யா ஹோட்டலுக்கு போகப் போகிறார். அங்கே போனாலும் கோபியின் விசுவாசியாக பல சூழ்ச்சிகளை செய்து பாக்கியவை நடுத்தெருவில் நிப்பாட்டுவதற்கு கோபி சதி செய்யப் போகிறார். ஆனால் பாக்யாவிற்கு ஹோட்டல் வருமானம் எதுவும் இல்லை என்றால் பாதிக்கப்படுவது கோபியின் அம்மா மற்றும் பிள்ளைகள் தான் என்பதை கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

தொடர்ந்து பாக்யா ஜெயித்துக் கொண்டு வரும் நிலையில் இந்த கோபியின் சூழ்ச்சியால் பாக்கியா முதல் முறையாக தோற்றுப் போக வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து பாக்கியா, கோபிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளர்ந்து வருவார். ஆனால் இதில் ஒரு முக்கியமான கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவே அரைப்பது போல் தொடர்ந்து கொண்டே வருவது பார்ப்பவர்களுக்கு போரடித்து விட்டது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News