வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மாமியாருக்கு ஏற்ற ஆளு இந்த சக்காளத்தி.. அப்பன் செஞ்ச பாவம், மகன்களை மீட்டெடுக்கும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வேண்டாத மருமகள் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பதற்கு ஏற்ப கோபியின் அம்மா எதற்கெடுத்தாலும் பாக்கியவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். செழியன், ஜெனிக்கு பண்ணின துரோகத்துக்கு எதுவும் கண்டிக்காமல் பாக்யா எப்படி சொல்லாமல் மறைத்தார் என்ற விஷயம் தான் மாமியார் கண்ணுக்கு பெரிய குத்தமாக தெரிகிறது.

அதனால் பாக்யாவிடம் தான் தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டு அவரை குறை சொல்லுகிறார். இதனை பார்த்த கோபியும் இது தான் சான்ஸ் என்று பாக்கியவை திட்டுகிறார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ராதிகா பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பேசி மாமியாரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.

மாமியாருக்கு சரியான பதிலடி கொடுத்து வாயை அடக்க வைப்பதில் ராதிகா சரியாகத்தான் இருக்கிறார். அத்துடன் எழிலை பார்த்து செழியன் எனக்கு என் மகளை தேடுகிறது என்னுடன் வா பார்த்துட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு நான் ஏன் வரவேண்டும் நீ பண்ணின தப்புக்கு, பாவம் அம்மா தேவையில்லாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று திட்டி விட்டு போய்விடுகிறார்.

Also read: குணசேகரனை காப்பாற்றிய ஜீவானந்தம்.. சொதப்பிய கௌதம், 40% சொத்தை நிர்வாகம் பண்ணும் மருமகள்கள்

அதன் பின் செழியன், ஜெனி வீட்டிற்கு சென்று கெஞ்சி கூத்தாடி பார்க்கிறார். ஆனால் எதற்குமே அசராமல் ஜெனி பேசக்கூட தயாராக இல்லை. அதன் பின் கோபி அவரை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அடுத்ததாக பாக்யா, மாமியார் சொன்னதை நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் அமிர்தா கணேசன் விஷயம் தெரிந்தால் இன்னும் என்னென்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது என்பதை நினைத்து கவலைப்படுகிறார்.

இதனால் துவண்டு போய் இருக்கும் பாக்கியாவிற்கு பக்கபலமாக ராதிகா இருந்து ஆறுதல் சொல்கிறார். இதனால் அமிர்தா கணேசன் விஷயமும் ராதிகாவிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில் பாக்கியா மகன்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு கூடவே இருந்து சப்போர்ட் செய்யப் போகிறார்.

இதனை பார்க்கும் பொழுது பெண்ணுக்குப் பெண் பக்க பலமாக இருந்தால் எந்த விஷயத்தையும் எளிதாக சமாளித்து விடலாம். அத்துடன் பார்ப்பதற்கும் ஒரு அழகான தருணமாக இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக பாக்யா ராதிகாவின் நட்பு மறுபடியும் பூத்து குலுங்குகிறது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. சிங்கப் பெண்ணிடம் தோற்றுப் போன குணசேகரன் 

Trending News