Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று ரிஸ்க் எடுத்த மாணிக்கம் தற்போது பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அதாவது பாண்டியன் வீட்டிற்குள் திருடன் மாதிரி நுழைந்த தங்கமயிலின் அப்பா, பழனிச்சாமி கையில் சிக்கியதால் அங்கிருந்து தப்பித்து ராஜி வீட்டுக்கு பின்னாடி மறைந்து கொண்டார்.
ஆனால் அங்கே மறைந்திருந்த தங்கமயில் அப்பாவை, முத்துவேல் சக்திவேல் மற்றும் குமரவேலு பார்த்து விட்டார்கள். உடனே இவர் பாண்டியனின் சம்மந்தி தானே என்று கண்டுபிடித்த நிலையில் அவரை தூணில் கட்டி வைத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டார். இதை தெரிந்த கதிர், தங்கமயிலின் அப்பாவை கூட்டிட்டு போகும் பொழுது அங்கே ராஜியின் குடும்பம் பிரச்சனை பண்ணி விட்டார்கள்.
உடனே பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களும் வந்து விட்டார்கள். தங்கமயில், அப்பாவின் நிலைமையை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் இந்த தகவலை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று பாக்கியத்திற்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். பாக்கியம் அந்த இடத்திற்கு வந்ததும் இந்த பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதபடி மறுபடியும் பொய் சொல்லி பாண்டியன் குடும்பத்தை முட்டாளாக்கிவிட்டார்.
அதாவது தங்கமயிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தான் இரவு 12 மணிக்கு மேல் வந்திருக்கிறார். எப்போதுமே தங்கமயிலுக்கு முதல் வாழ்த்தாக அவருடைய அப்பா தான் சொல்வார். அதே மாதிரி எங்களுடைய மகளின் பிறந்தநாளை நன்றாக கொண்டாடுவோம். ஆனால் இந்த ஆண்டு அவள் எங்களுடன் இல்லை என்பதால் வாழ்த்து சொல்வதற்கு யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறார் என்று பாக்கியம் பொய்க்கு மேல் பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.
உடனே பாக்கியம் சொன்னது தான் உண்மை என்று தங்கமயில் சொன்ன நிலையில் அந்தப் பிரச்சினை அதோடு முடிந்து விட்டது. ஆனாலும் சொன்ன பொய்களை மறைக்க அடுக்கடுக்காக பொய்யும் பித்தலாட்டமும் பண்ணிக் கொண்டு வரும் தங்கமயிலின் குடும்பம் நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் சிக்க போகிறார்கள். இதற்கு உடந்தையாகவும் தங்கமயில் இருக்கிறார்.
ஆனால் இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் கோமதி மற்றும் பாண்டியன், இதை பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இருந்தாலும் மீனாக்கு தங்கமயில் குடும்பத்தின் மீது சந்தேகம் வந்துவிட்டது. அத்துடன் அவர்கள் தங்கமயிலின் பிறந்தநாள் என்று சொன்னதையும் நம்ப முடியாமல் மீனா குழப்பத்தில் இருக்கிறார். பிறகு மீனாவுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ராஜிக்கு சொல்லிய பொழுது ராஜிக்கும் அதே சந்தேகம் வரப்போகிறது.
அந்த வகையில் மீனா மற்றும் ராஜி இருவரும் சேர்ந்து தான் தங்கமயிலின் பற்றி உண்மையான ரகசியத்தை கண்டுபிடிக்க போகிறார்கள். அதுவரை பாண்டியன், தங்கமயில் இன் குடும்பத்தை கண்முடித்தனமாக தான் நம்ப போகிறார்.