புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியாவின் மருமகள்.. பொறுமையை இழந்து பொங்கி எழுந்த ஜெனி

Bhakkiya Serial: எந்த சூழ்நிலையிலயும் யாரை நம்பியும் நாம் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த ஒரு சீரியல்தான் பாக்கியலட்சுமி. அதனால் ஆரம்பித்த பொழுது ஒட்டுமொத்த குடும்பங்களும் கொண்டாடும் விதமாக கதை நகர்ந்து வந்தது. ஆனால் போகப் போக கதையை இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருப்பதால் இந்த நாடகத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனாலும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெனிபர், திவ்யா கணேஷ் பாக்யாவின் மருமகளாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் மக்களை கவர்ந்ததால் தொடர்ந்து ஜெனிபர் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கிறது. ஆனால் சமீபத்தில் இவருடைய பெயரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெனிபர் அவருடைய பொறுமையை மொத்தமாக எழுந்து தற்போது ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது பாக்கியா சீரியலில் செழியனுக்கு மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் நிஜத்திலும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி இருக்கிறது.

இதைப் பார்த்த திவ்யா கணேஷ் சோசியல் மீடியாவில் வருவதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப சைலண்டாகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால் போகப் போக இதனுடைய தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் தற்போது அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது சீரியலில் கணவன் மனைவியாக நடித்தால் நிஜத்திலும் அவர்கள் கணவன் மனைவியாகி விடுவார்கள் என்று சொல்வது அர்த்தமே இல்லாதது.

நாங்கள் எங்களுடைய தொழிலை சரிவர செய்ய வேண்டும் என்பதற்காக நடித்துக் கொண்டு வருகிறோம் அவ்வளவுதான். ஆனால் இதற்கு காரணம் நீங்களே பெருசாக பேசி குடும்பத்திற்குள் பிரச்சனையே பண்ண வேண்டாம். ஏனென்றால் செழியன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குடும்பம் இருக்கிறது. தற்போது தேவையில்லாத இந்த சர்ச்சைகள் அவருடைய குடும்பம் மற்றும் என்னுடைய குடும்பத்திலும் ஏகப்பட்ட சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதனால் எந்த ஒரு விஷயத்தையும் சரியாக தெரிவதற்கு முன் யோசித்துப் பாருங்கள். ஒரு விஷயத்தை சோசியல் மீடியாவில் தவறாக பதிக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார். ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்ய கணேஷ் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, செல்லம்மா, மகாநதி போன்ற பல சீரியல்கள் நடித்திருக்கிறார். ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஜெனி கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக தற்போது சர்ச்சை கிளம்பிய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் போட்டிருக்கிறார்.

Trending News