Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா இல்லை என்றாலும் தற்போது குடும்பத்துடன் இருக்கும் அளவிற்கு சொகுசான வாழ்க்கை கிடைத்துவிட்டது என்பதற்கு ஏற்ப கோபி எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாக்கியா வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார். ஈஸ்வரியும் இதுதான் எனக்கு வேணும் இதற்காகத்தான் நான் அவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணினேன் என்பதற்கு ஏற்ப கோபி தன்னுடன் இருக்கும் பட்சத்தில் மகனை விழுந்து விழுந்து கவனிக்கிறார்.
ஆனாலும் அவ்வப்போது சகுனி வேலையை பார்ப்பதை மட்டும் விட்டு விடவில்லை. அந்த வகையில் பாக்யாவை கூப்பிட்டு செழியன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் மாமியார் வீட்டில் இருக்கப் போகிறான். அவனிடம் கேட்டால் சரியாக பதில் சொல்லாமல் மழுப்புகிறான். நீயாவது அவனை கூப்பிடு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா தற்போது அவங்களோட சூழ்நிலை அங்கே இருக்கும் படி அமைந்துவிடுகிறது.
ஜெனி அப்பாவிற்கு உடம்பு சரியில்லாததால் செழியன் தான் எல்லாத்தையும் பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அவன் எப்பொழுது வரணுமோ அப்பொழுதே வரட்டும், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மகனை பக்கத்திலேயே வைத்து கைக்குள் போட்டு வைக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்ததை கிடையாது. ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை அவங்களை பார்த்துக் கொள்ளட்டும்.
எங்க இருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும் என்று தான் நான் நினைக்கிறேன் அதனால் செழியன் வரும்பொழுது வரட்டும் என்று ஈஸ்வரிக்கு பதில் அளித்து விடுகிறார். ஆனால் ஈஸ்வரி இதை அப்படியே விடமாட்டார் இதை வைத்தே வீட்டிற்குள் பிரச்சனை பண்ணி கலகத்தை மூட்டிவிடுவார். அடுத்ததாக இனியா, ஆகாசை காதலிக்கும் பட்சத்தில் ஆகாசை தேடி செல்வி அக்கா வீட்டிற்கு சர்ப்ரைஸாக போகிறார்.
இனியவை எதிர்பார்க்காத ஆகாஷ் ரொம்பவே அதிர்ச்சியாகி பயப்பட ஆரம்பித்து விட்டார். உடனே இனியா உங்க அம்மாவும் இல்லை தம்பிகளும் இல்லை என்று தெரிந்து தான் நான் வந்தேன் நீ எதற்கும் பயப்படாதே என்று இரண்டு பேரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் செல்வி அக்கா வீட்டிற்குள் வந்து விடுகிறார். ஆனால் இனியா அங்கே மறைந்து இருந்து செல்வி அக்கா கண்ணில் படாத படி எஸ்கேப் ஆகி விடுகிறார்.
கலெக்டராக வேண்டும் என்று லட்சியத்துடன் படிக்கும் ஆகாசை இனியா தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வருகிறார். இவர்களுடைய காதல் ட்ராக் வீட்டிற்கு தெரிய வரும் பொழுது இதன் மூலம் ஈஸ்வரி பிரச்சினை பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்ததாக எழில் ஏதோ ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கிறது என்று அனைவருக்கும் தகவலை கொடுத்து பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார். அந்த வகையில் எழில் சொந்தமாக ஒரு வீடு வாங்குவது போல் தெரிகிறது. அதனால் எழிலும் இப்போதைக்கு பாக்கியா வீட்டிற்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை.