இனியாவை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி சீரியல்.. சுதாகர் விரித்த வலையில் சிக்கிய கோபி, சவால் விடும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட்கள் நிச்சயம் மக்கள் போடும் கமெண்ட்ஸ்களை பார்ப்பார்கள். அப்படி அந்த கமெண்ட்களை பார்த்து படித்த பின்பும் எப்படி அதில் தொடர்ந்து நடிக்க முடிகிறது என்று இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலுக்கு எதிராக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு கதைகள் இல்லாமல் அரைத்து மாவை அரைக்கிறார்கள்.

இருந்தாலும் ஏதோ வருகிற டிஆர்பி ரேட்டிங்காக எதைப் பற்றியும் யோசிக்காமல் தொடர்ந்து புதுசு புதுசாக கதைகளை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இனியாவை வைத்து சீரியலை உருட்டி வருகிறார்கள். இனியா ஆகாஷ் காதல் விவகாரம் ஓடிய நிலையில் இனிய படித்து தற்போது ரிப்போர்டராக வேலை சேர்ந்து விட்டார்.

ஆனால் படிப்பில் கவனமாக இருந்த ஆகாஷ் ஐஏஎஸ் எக்ஸாமில் தோற்றுப் போய்விட்டார். இதனை அடுத்து இன்னும் இனியா படிக்க வேண்டும் என்று பாக்கியா, இனியாவிற்கு அட்வைஸ் கொடுக்கிறார். உடனே இனியாவும் எனக்காக இல்லை என்றாலும் உனக்காக நான் படிக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இந்த சூழ்நிலையில் பாக்கியாவின் ஹோட்டலை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நினைக்கும் சுதாகர், இனியா மூலம் ஈசியாக கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டு விட்டார்.

அந்த வகையில் கோபியை வீட்டிற்கு வர வைத்த சுதாகர் என்னுடைய பையன், இனியாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அதனால் உங்களுக்கு சம்பந்தம் என்றால் நாம் இரண்டு பேரும் சம்பந்தி ஆகிவிடலாம் என்று கோபியிடம் பேசுகிறார். கோபியும் நல்ல வசதி வாய்ப்பு இருக்கிறது என்று ஈஸ்வரிடம் சொல்லி பாக்கியாவிடம் பேசப்போகிறார்கள்.

அதற்கு பாக்கியம், இனியா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாள். அவள் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி, பாக்யாவிடம் யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும். இனியாவிற்கு பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ நல்ல சம்பந்தத்தை விட முடியாது. அதனால் நிச்சயம் இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன் என்று சவால் விடுகிறார்.

Leave a Comment